உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 34.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் வழியில் வள்ளலார்

41

ஒழியில் ஒடுக்க உரையில் 'ஓர்ந்து' என்பதை விளக்க வரும் வள்ளலார் "ஓர்ந்து என்பதில் ஓர் என்னும் பிறவினை முதனிலை அறிவு தனக்கெதிரிட்ட உணர்ச்சிப் பொருட் கண் எதிரிடுவது போன்று எதிரிடாது உள்ளாழ்ந்த அப் பொருட்டிறன் எதிரிடப் பெயரும் புடைபெயர்ச்சியும், எதிரிட்ட பின்னர் விகற்பியாது எதிர்க்குந்தொறும் எதிரிடப் பெயரும் புடை பெயர்ச்சியும் கோடலிற் கருவித் திறனும் தன் திறனும் அருட்டிறனும் உற்றுணர்ந்து அவ்வுணர்ச்சி விகற்பியாது தேறி நின்றமையைக் குறித்தது காண்க. இக்குறிப்புத் தோன்றவன்றே திருவள்ளுவ நாயனாரும் 'ஓர்த்துள்ள முள்ளது ணரின்' என்றார் என்றறிக" என்கிறார் (357).

பொய்யும் புனையும்

தொண்ட மண்டல சதக ஆய்வில், 'தொண்ட மண்டலம் என்பதை விளக்க வரும் வள்ளலார், 'கோமான்' என்பதன் புணர்ச்சியை விளக்கி இது 'கை படலறியான் பொய்படல் ஒன்றோ" என்பதற்கு இனம் என்று கூறுகிறார். இக்குறிப்பு,

"பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப் பேதை வினைமேற் கொளின்”

என்னும் குறட் குறிப்பாகும்.

உடலை நெடிது உய்த்தல்

உடலை நெடுங்காலம் சீராக வைத்திருக்கச் செவ்விய வழி 'அற்றால் அளவறிந்து உண்ணல்' என்பார் வள்ளுவர். உடலைப் பெற்றவன் தன் முயற்சியால் செய்யும் செயல் அஃது என்பாராய்,

"அஃதுடம்பு பெற்றான் நெடிதுய்க்கு மாறு'

என்பார் (943). இக்கருத்தைப் பல வகைகளால் வலி யுறுத்துகிறார் வள்ளலார்.

"எவ்விதத்தாலாயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும்"

"தாம் தம்முடைய தேகத்தைச் சாக்கிரதையாக உபசரித்து வரவேண்டும். சாக்கிரதை என்பது அருந்தல் பொருந்தல் களில் மிதபோசனம், மிதபோகம்'

"புண்ணியப் பயனால் பெற்ற தேகத்தைக் கூடிய வரையில் சாக்கிரதையோடு பக்குவ மார்க்கத்தில் நடத்தல் வேண்டும்." வை உடலை நெடிது உய்க்குமாற்றை விளக்கும்.