உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம் -35 ஓ

பதினெட்டாம் பாடல் :

போரெதிர்ந் தேற்றார் மதுகை மறந்தபக் காரெதிர்ந் தேற்ற கமஞ்சூல் எழிலிபோல் நீர்நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்துச் சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்நின் சீர்நிரந் தேந்திய கன்றொடு நேர்நிரந் தேறுமா றேற்குமிக் குன்று;

ஒள்ளொளி மணிப்பொறி யான்மஞ்ஞை நோக்கித்தன் உள்ளத்து நினைப்பானைக் கண்டனள் திருநுதலும் உள்ளிய துணர்ந்தேனஃ துரையினி நீயெம்மை எள்ளுதன் மறைத்தலோம் பென்பாளைப் பெயர்த்தவன் காதலாய் நின்னியல் களவெண்ணிக் களிமகிழ் பேதுற்ற இதனைக்கண் டியானோக்க நீயெம்மை ஏதிலா நோக்குதி என்றாங்கு உணர்ப்பித்தல் ஆய்தேரான் குன்ற வியல்பு;

ஐவளம் பூத்த அணிதிகழ் குன்றின்மேல் மைவளம் பூத்த மலரோர் மழைக்கண்ணார் கைவளம் பூத்த வடுவொடு காணாய்நீ மொய்வளம் பூத்த முயக்கம்யாங் கைப்படுத்தேம்

மெய்வளம் பூத்த விழைதகு பொன்னி

நைவளம் பூத்த நரம்பியைசீர்ப் பொய்வளம்

பூத்தன பாணாநின் பாட்டு;

தண்டளிர் தருப்படுத் தெடுத்துரைஇ

மங்குன் மழைமுழங்கிய விறல்வரையால்

கண்பொருபு சுடர்ந்த டர்ந்திடந்

திருள்போழுங் கொடிமின்னால்

வெண்சுடர் வேல்வேள் விரைமயின்மேல் ஞாயிறுநின்

ஒண்சுடர் ஓடைக் களிறேய்க்கு நின்குன்றத்

தெழுதெழில் அம்பலங் காமவே ளம்பின்

தொழில்வீற் றிருந்த நகர்;

ஆர்ததும்பு மயிலம்பு நிறைநாழி

சூர்ததும்பு வரைய காவால் கார்ததும்பு நீர்ததும்புவன சுனை ஏர்ததும்புவன செறிவு