உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

போர்தோற்றுக் கண்டுண்டார்கைபோல்வ கார் தோற்றும்

காந்தள் செறிந்த கவின்;

கவின்முகை கட்டவிழ்ப்ப தும்பிகட் டியாழின்

புரிநெகிழ்ப்பார் போன்றன கை;

அச்சிரக் காலார்த் தணிமழை கோலின்றே

வச்சிரத் தான்வான வில்லு;

வில்லுச்சொரி பகழியின் மென்மலர் தாயின வல்லுப்போர் வல்லாய் மலைமேன் மரம் வூட்டுருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டுச் சீர்ததும்பு மரவமுடன் சிறந்து

போர்ததும்பு மரவம் போலக்

கருவி யார்ப்பக் கருவிநின்றன குன்றம் அருவி யார்ப்பமுத் தணிந்தனவரை குருவி யார்ப்பக் குரல்குவிந்தன தினை எருவை கோப்ப எழிலணி திருவில் வானி லணித்த வரியூதும் பன்மலராற் கனி வளைத்த சுனை:

புரியுறு நரம்பு மியலும் புணர்ந்து

சுருதியும் பூவுஞ் சுடருங் கூடி

எரியுரு ககிலோ டாரமுங் கமழும் செருவேற் றானைச் செல்வநின் அடியுறை

உரிதினி னுறைபதிச் சேர்ந்தாங்குப்

பிரியா திருக்கவெஞ் சுற்றமோ டுடனே.

85

குன்றம் பூதனார் பாட்டு; நல்லச்சுதனார்

சை

பண்காந்தாரம்.

பத்தொன்பதாம் பாடல் :

நிலவரை யழுவத்தான் வானுறை புகறந்து

புலவரை யறியாத புகழ்பூத்த கடம்பமர்ந்த

தருமுனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சிமன்

இருநிலத் தோரும் இயைகென ஈத்தநின் தண்பரங் குன்றத் தியலணி நின்மருங்கு சாறுகொள் துறக்கத் தவளொடு

மாறுகொள் வதுபோலு மயிற்கொடி வதுவை

புலத்தினும் போரினும் போர்தோலாக் கூடற்