உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம்

-

35

கலப்போ டியனந்த இரவுத்தீர் எல்லை அறம்பெரி தாற்றி யதன்பயன் கொண்மார் சிறந்தோர் உலகம் படருநர் போல உரிமாண் புனைகலம் ஒண்டுகில் தாங்கிப் புரிமாண் புரவியர் போக்கமை தேரர் தெரிமலர்த் தாரர் தெருவிருள் சீப்பநின் குன்றொடு கூடல் இடையெல்லாம் ஒன்றுபு நேர்பூ நிறைபெய் திருநிலம் பூட்டிய

தார்போலு மாலைத் தலைநிறையால் தண்மணல் ஆர்வேலை யாத்திரைசெல் யாறு:

சுடரொடு சூழ்வரு தாரகை மேருப் புடைவரு சூழல் புலமாண் வழுதி மடமயிலோரு மனையவ ரோடும் கடனறி காரியக் கண்ணவ ரோடுநின் சூருறை குன்றிற் றடவரை யேறிமேற் பாடு வலந்திரி பண்பிற் பழமதிச் சூடி யசையுஞ் சுவன்மிசைத் தானையிற் பாடிய நாவிற் பரந்த வுவகையின் நாடு நகரு மடைய அடைந்தனைத்தே படுமணி யானை நெடியோய்நீ மேய கடிநகர் சூழ்நுவலுங் கால்;

தும்பி தொடர்கதுப்ப தும்பி தொரடாட்டி லம்பணி பூங்கயிற்று வாங்கி மரனசைப்பார் வண்டார்ப் புரவி வழிநீங்க வாங்குவார் திண்டேர் வழியிற் செலநிறுப்பார்க் கண்டக் கரும்பு கவழ மடுப்பார் நிரந்து

பரிநிமிர் தானையான் பாசறை நீர்த்தே குருகெறி வேலோய்நின் குன்றக்கீழ் நின்ற இடைநிலம் யாமேத்து மாறு;

குரங்கருந்து பண்ணியங் கொடுப்போரும் கரும்பு கருமுகக் கணக்களிப் போரும் தெய்வப் பிரமஞ் செய்கு வோரும் கைவைத் திமிர்புகுழல் காண்கு வோரு

மியாழின் இளிகுரல் சமங்கொள் வோரும்