உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

இளங்குமரனார் தமிழ்வளம் 35

பருவமில் கோங்கம் பகைமல ரிலவம் நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க மணந்தவை போல வரைமலை யெல்லாம் நிறைந்தும் உறழ்ந்து நிமிர்ந்துந் தொடர்ந்தும் விடியல் வியல்வானம் போலப் பொலியும் நொடியாய்நின் குன்றின்மிசை;

நினயானைச் சென்னி நிறங்குங் குமத்தாற் புனையாப்பூ நீரூட்டிப் புனைகவரி சார்த்தாப் பொற்பவழப் பூங்காம்பிற் பொற்குடை யேற்றி மலிவுடை யுள்ளத்தான் வந்துசெய் வேள்வியுள் பன்மண மன்னும் பின்னிருங் கூந்தலர் கன்னிமை கனிந்த காலத் தார்நின்

கொடியேற்று வாரணங் கொன்கவழ மிச்சில் மறுவற்ற மைந்தர்தோள் எய்தார் மணந்தார் முறுவற் றலையளி எய்தார்நின் குன்றம் குறுகிச் சிறப்புணாக் கால்;

குறப்பிணாக் கொடியைக் கூடியோய் வாழ்த்துச் சிறப்புணாக் கேட்டி செவி;

உடையும் ஒலியலுஞ் செய்யைமற் றாங்கே

படையும் பவழக் கொடிநிறங் கொள்ளும்

உருவும் உருவத்தீ ஒத்தி முகனும்

விரிகதிர் முற்றா விரிசுடர் ஒத்தி

எவ்வத் தொவ்வா மாமுதல் தடிந்து

தெவ்வுக் குன்றத்துத் திருந்துவேல் அழுத்தி

அவ்வரை யுடைத்தோய்நீ இவ்வரை மருங்கிற்

கடம்பமர் அணிநிலை பகர்ந்தேம்

உடங்கமர் ஆயமொ டேத்தினந் தொழுதே.

நப்பண்ணனார் பாட்டு; மருத்துவன் நல்லச்சுதனார் இசை!

பண் காந்தாரம்.

இருபத்தொன்றாம் பாடல் :

ஊர்ந்த தை, எரிபுரை யோடை யிடையிமைக்குஞ் சென்னிப்,

பொருசமங் கடந்த புகழ்சால் வேழம்

தொட்டதை, தைப்பமை சருமத்திற் றாளியை தாமரை,