உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிபாடலில் திருமுருகன்

துப்பமை துவர்நீர்த் துறைமறை யழுத்திய

வெரிநத் தோலொடு முழுமயிர் மிடைந்த

வரிமலி யரவுரி வள்புகண் டன்ன

புரிமென் பீலிப் போழ்புனை அடையல்

கையதை, கொள்ளாத் தெவ்வர்கொள் மாமுதல் தடிந்து புள்ளொடு பெயரிய பொருப்புப்படை திறந்தவேல் பூண்டதை, சுருளுடை வள்ளி இடையீடு பிழைத்த உருளிணர்க் கடம்பின் ஒன்றுபடக் கமழ்தார் அமர்ந்ததை, புரையோர் நாவிற் புகழ்நல முற்றி நிரையே ழடுக்கிய நீளிலைப் பாலை அரைவரை மேகலை அணிநீர்ச் சூழித் தரைவிசும் புகந்த தண்பரங் குன்றம் குன்றத் தடியுறை யியைகெனப் பரவுதும் வென்றிக் கொடியணி செல்வநிற் றொழுது; சுடுபொன் ஞெகிழத்து முத்தரிசென் றார்ப்பத் துடியின் அடிபெயர்த்துத் தோளசைத்துத் தூக்கி அடுநறா மகிழ்தட்ப ஆடுவாள் தகைமையின் நுனையிலங் கெஃகெனச் சிவந்த நோக்கமொடு துணையணை கேள்வனைத் துனிப்பவ னிலையும் நிழல்காண் மண்டில நோக்கி

அழல்புனை அவிரிழை திருத்துவாள் குறிப்பும் பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம் உதிர்த்துப் பின்னுற ஊட்டுவாள் விருப்பும் பல்லூழ் இவையிவை நினைப்பின் வல்லோன் ஓவத் தெழுதெழில் போல மாதடிந் திட்டோய்நின் குன்றின் மிசை;

மிசைபடு சாந்தாற்றி போல எழிலி

இசைபடு பக்கம் இருபாலுங் கோலி விடுபொறி மஞ்ஞை பெயர்புட னாட விரல்செறி தூம்பின் விடுதுளைக் கேற்ப முரல்குரல் தும்பி அவிழ்மலர் ஊத யாணர் வண்டினம் யாழிசை பிறக்கப் பாணி முழவிசை அருவிநீர் ததும்ப ஒருங்கு பரந்தவை யெல்லாம் ஒலிக்கும்

89