உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் -35

90

இரங்கு முரசினான் குன்று;

தாழ்நீர் இமிழ்சுனை நாப்பட் குளித்தவண்

மீநீர் நிவிந்த விறலிழை கேள்வனை வேய்நீர் அழுந்துதன் கையின் விடுகெனப் பூநீர்பெய் வட்டமெறியப் புணைபெறா தருநிலை நீரின் அவள்துயர்கண்டு

கொழுநன் மகிழ்தூங்கிக் கொய்பூம் புனல்வீழ்ந்து

தழுவுந் தகைவகைத்துத் தண்பரங் குன்று; வண்டார் பிறங்கண் மைந்தர் நீவிய தண்கமழ் சாந்தந் தைஇய வளியும் கயல்புரை கண்ணியர் கமழ்துக ளுதிர்த்த புயல்புரை கதுப்பக முளரிய வளியும் உருளிணர்க் கடம்பின் நெடுவேட் கெடுத்த முருகு கமழ்புகை நுழைந்த வளியும் அசும்பு மருவி அருவிடர்ப் பரந்த

பசும்பூண் சேஎய்நின் குன்றநன் குடைத்து;

கண்ணொளிர் திகழட ரிடுசடர் படர்கொடி மின்னுப்போல்

ஒண்ணகை தகைவகை நெறிபெற இடையிடை யிழைத்தியாத்த செண்ணிகைக் கோதை கதுப்போ டியல

மணிமருள் தேன்மகிழ் தட்ப வொல்கிப்

பிணிநெகிழப் பைந்துகில், நோக்கஞ் சிவப்பூரப்

பூங்கொடி போல நுடங்குவாள் ஆங்குத்தன்

சீர்த்தகு கேள்வன் உருட்டு துடிச்சீரால் கோடணிந்த முத்தாரம் ஒல்க ஒசிபவளேர் ஆடை யசைய அணியசையத் தானசையும் வாடையுளர் கொம்பர் போன்ம்;

வாளி புரள்பவை போலுந் துடிச்சீர்க்குத் தோளூழ் பெயர்ப்பவள் கண்;

மாறமர் அட்டவை மறவேல் பெயர்ப்பவை ஆறிரு தோளவை அறுமுகம் விரித்தவை நின்றமர் ஆயமோ டொருங்குநின் அடியுறை இன்றுபோல் இயைகெனப் பரவுதும்

ஒன்றார்த் தேய்த்த செல்வநிற் றொழுதே.

நல்லச்சுதனார் பாட்டு; கண்ணகனார் இசை; பண்

காந்தாரம்.