உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

111

தன் ஆனையே அன்றி அயலார் ஆன்களையும் கவரவல்லவன்! தன் வயிற்றகத்துத் தவழ்ந்து குடிப்பெருஞ்சார்பில் திகழ்ந்து

புலிப்போத்தெனப் புறப்பட்ட தன்மகனுக்கு வெற்றியன்றி வேறொன்று எய்தாது என்பதை அறியாளே!

அடுக்கி வரும் அல்லல்களை யெல்லாம் அல்லலுக்கு ஆட்படச் செய்ய வல்ல அரியேறாம் தன்மகனைப் பற்றிய மீட்சி என்ன அரிதேயோ?

தானே மீண்டுவர ஆற்றலும் அறிதிறமும் இல்லாத ஆனின் மீட்சி அல்லவோ மீட்சிப் பேறு!

தாயின் அவலமும் சேயின் கவலையும் ஒருங்கே ஒழிந்த பேறு அல்லவோ ஆனின் மீட்சி!

'ஆன் மீட்ட மகனை வினவுறாள்'

'ஆத் தழீஇக் கலுழ்ந்து என் எதிர்ப்பட்டாயோ என்று (வினவுவாள்) என்னும் இயற்கை முரண் எத்தகைய நயமானது!

மகனை என வாளா கூறாமல், மீட்டமகனை, கடுஞ்சுரையான், மீட்டமகனை, உயிர்போற்றான் மீட்டமகனை,காட்டகஞ்சென்று, மீட்டமகனை என் அடைபல காட்டி நடை நயம் தீட்டிய இப்பாட்டு

தமிழ்ப் பெரும் பொருளே அல்லவோ!

ஓட்டத்தைத்தந்து என்னும் பொருள் சிறக்க 'ஓட்டந்து' என்றொரு புத்தாட்சியைத் தந்த சீர்மைதான் என்ன!

'தன்னெதிர் தோன்றும்' ஆனியிடம் 'என் எதிர்ப்பட்டாயோ?' என்னும் எதுகைச்சீர்மை வினாவெழில்தான் என்ன!

பெரும் பொருளார் 'பெரும் பொருளாரேயாம்!

கொற்றவை வழிபாடு பழமை மிக்கது. வெற்றியையே அன்னையாக்கி வழிபடும் வழிபாடு அது. கொற்ற + அவ்வை + கொற்றவை! கொற்றம். வெற்றி. 'கொற்றக்குடை' வேந்தர் குடை அல்லவோ! கொற்றவன், அரசன் அல்லனோ!

துடிப்பறை கொட்டலும் துடிப்பாக வினையாற்றலும் மிக்கது கொற்றவை நிலைப்புறத்துறையாகும். அது வெட்சித்துறை சார்ந்தது. அதனை,