உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

ம்

113

பராயது) என்று வருவித்துக் கொள்ளும் துறைக்கு எடுத்துக் காட்டாகக் கூறுகிறார்;

பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரையை மீட்டு வெற்றியோடு திரும்பிய வீரன் ஒருவன், கொற்றவை திருமுன் நின்று கூறுவதாக அமைந்தது இப்பாட்டு.

'கொற்றவை' என்று விளித்துத் தன் வேண்டுகையைத் தெரிவிக்கிறான். நிரையின் கழுத்தில் அணியப்படுவது மணி. மீட்ட நிரையின் மணியை எடுத்துக் கொண்டு வந்த வீரன், 'அம்மையே, ஆன் கழுத்து மணியோடு, என் கழுத்தை அரிந்து யான் என் தலையையும் படையலாக வழங்குவேன்: இவ்விரண்டையும் பெற்றுக் கொண்டு ஒன்றே ஒன்று வழங்குதல் வேண்டும். அது வீறு மிக்கஎம் வேந்தன் செங்கோல் சிறக்கும் வகையில் போரில் அவனுக்கு வெற்றியைத் தருவாயாக' என வேண்டுகின்றான்.

'கொற்றவை கொற்றம் கொடு' என்னும் முடிநிலை, முச்சீரில் முற்று மோனையாய் முடிகின்றது.

நீவறிதே வழங்க வேண்டும் என்று கூறானாய், மற்றவை பெற்றுக் கொற்றம் கொடு என்கிறான்.

அக் கொடையும் நீ கொடுத்த பின்னர் யான் வழங்குவேன் என்பது இல்லாமல், முன்னாகவே நீ ஒன்றுக்கு ரண்டாகப் பெற்றுக் கொண்டு வழங்கு' என்கிறான்.

கேட்பதும் என் நலம் குறித்தது அன்று; நாட்டு நலம் குறித்தது என்பானாய்' வேந்தன் கோலோங்க' என்கிறான்.

வேந்தனும் எளியனும் அஞ்சும் இயல்பினனும் அல்லன் என்பானாய், வயவேந்தன்' என்றான். அவன் நின் அருள் இன்றியும் வெல்ல வல்லவன் தான்; எனினும் நின்னருள் பாலிப்புத்தானே நிறை பாலிப்பு என்பானாய் ‘வய' (வெற்றி) என்று வேந்தனுக்கு அடைதந்தான்.

என்றலை நின்றலை யான்தருவேன் என்னும் சொல்லழகும் தொடையழகும் பாவலர் தொடுக்கும் தொடைத்திறம் காட்டுவதாம்.

நிரை மீட்சியின் பின்னே என்ன போர், போரிட்டுத்தானே ஆனிரை மீட்சியாயது என்னின், போர் தொடங்கும் என்பதன்