உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

அறிகுறிதானே ஆவைக் கவர்தல்; அதன் பின்னர்ப் போராட்டம் உண்டு என்பது வெளிப்படைதானே! ஆதலால் கொற்றம் கொடு' என்றானாம்.

தன் தலையை அரிந்து தானே கொடுப்பனோ எனப் பரணிநூல் பயின்றாரும், வீரரியல் அறிந்தாரும் ஐயுற்று வினவார்!

'அடிக் கழுத்தின் நெடுஞ்சிரத்தை அரிவ ராலோ அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்ப ராலோ கொடுத்தசிரம் கொற்றவையைப் பரவுமாலோ குறையுடலம் கும்பிட்டு நிற்கு மாலோ'

என்பது கலிங்கத்துப்பரணிக் கோயில் பாடியது (111)

பாசறை என்பது பழஞ்சொல்; இன்றும் பெருவழக்காக வழங்கும் சொல். அதன் பொருள் அந்நாளில் காரணத்தொடும் அமைந்திருந்தது. பாசறை என்பது போர்ப் படைஞர் தங்குதற்காக அமைக்கப்பட்ட குடியிருக்கை. பசுமையான லை, தழை, கிளை ஆகியவற்றைக் கொண்டு இலைவீடுகளாக அமைக்கப்பட்டவை பாசறை எனப்பட்டன. பாசடை என்பது பச்சை இலை; பாசறை

என்பது பசுமை இல்லம் என்பதாம். பச்சைக்காய்களில்

ஆக்கப்படுவன பச்சி, பச்சணி, பச்சடி என வழங்கப்படுதல் அறிக; பச்சை பாசம், பாசி என நீளலும் அறிக.

பாசறைக்குப் 'பாடி' என்பதும் ஒருபெயர். பாடியாவது கண்மூடித்துயிலுமிடம் என்பதாம். கண்பாடு என்பது உறக்கம். நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள், யாதொன்றும் கண்பாடரிது' என்பது திருக்குறள். கண்பாடு - கண்ணுறக்கம்; அவ்விடம் பாடுறும் இடம்; பாடு;பாடி ஆயிற்று.

பாசறை பற்றிய பெரும் பொருள் விளக்க வெண்பாக்கள் புறத்திரட்டில் மூன்றுள. அவற்றுள் ஒன்று வருமாறு (1273)

'தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும்

பழிச்சிய சீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன

புல்லணலார் வெய்துயிர்க்கும் புண்...

(14)

வஞ்சித்திணைத் துறைகளுள் ஒன்றாய தழிஞ்சித்துறைக்கு இவ் வெண்பாவைக் காட்டுகிறார் நச்சினார்க்கினியர் (புறத்திணை.7).

.