உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

119

தலையற்ற குறையுடலம் துள்ளல் வீரர்கள் விண்ணகம் விரும்பிச் செல்லுதல் போன்றது (27) என்றும்,

மலையும் மலையும் தாக்கல்போல் களிறும் களிறும் தாக்கின என்றும் களிற்றின் மேல் தோன்றி தோலா வீரர், மலையுறை தெய்வம் போல்வார் என்றும் (28)

வெண்குடையைப் பற்றும் களிற்றின் கை, மதியைப் பற்றும் கருநிழல் (கிரகணம்) என்றும் (29)

நெய்விடப்பட்ட தீ விளக்கமுறுவது போல் அந்தணர் ஒளிமிகும் செயல்களே புரிவர் என்றும் (34) உவமைப்படுத்துகிறார்.

அடக்கம் என்றதும் நினைவில் எழுவது 'உறுப்படக்கி' என்னும் ஆமையாம்.

'ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்க லாற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து.'

என்பது வாய்மொழி. இவ்வுவமையைப் பலப்பலரும் ஆண்டுளர். பெரும் பொருள் விளக்கத்தார் அரியவோர் உவமையைக் கூறுகிறார். வேந்தன் அரணைப் பற்ற எண்ணிய அளவில் அஞ்சி ஒதுங்காதார் எவரும் இலர். தானே செயலாற்றும் கோட்டைப் பொறிகளும் கூட, அறிவறிந்த ஆன்றோர் அடக்கம் போல் அடங்கி விட்டன என்கிறார். (25)

‘வெஞ்சின வேந்தன் எயில்கோள் விரும்பியக்கால்

அஞ்சி ஒதுங்காதார் யாவரவர் - மஞ்சுசூழ் வான்தோய் புரிசைப் பொறியும் அடங்கினவால் ஆன்றோர் அடக்கம்போல் ஆங்கு'

என்பது அது.

உருவகம்

சீற்றத்தையும் பசியையும் தீயாக உருவகப் படுத்தியும் பெரும் பொருள் பாடுகின்றது.

‘மட்டவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ

விட்டெரிய விட்ட வகை’

என்றும் (16)