உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

இளங்குமரனார் தமிழ்வளம் -35

358

இடிபுறப் பட்டாங் கெதிரேற்றார்; மாற்றார் அடிபுறத் தீடும் அரிது’

என்பது அது.

தகர் - ஆட்டுக்கடா. அகத்தோன் வீழ்ந்த புதுமைக்கு இதனை எடுத்துக் காட்டுகிறார் நச்சினார்க்கினியர்.

பாகித்தானிய இந்தியப் போரில் பாகித்தானியப்படை இந்திய மண்ணுள் புகுங்காலைத் தடுக்காது இந்தியப்படை பின்வாங்கி ஒதுங்கியதும்,பகைப்படைகளும் ஊர்திகளும் பல்க வந்த பின்னர் அவை வந்த வழியாய் இருந்த ஒரே ஒரு பாலத்தைத் தகர்த்துச் சுற்றி வளைத்து ஒட்டு மொத்தமாகப் பற்றிக் கொண்டதுமாகிய வரலாற்றுச் செய்தி இவண் எண்ணத் தக்கதாம்.

கார்க்கு ஈண்டு எனவும், கார்க் கீண்டு எனவும் இரட்டுறல்பட நின்றது கார்க்கீண்டு. கீண்டு - கிழித்து, ஈண்டு - நெருங்கி. மல்கும் உவமை:

‘வெட்சிப்பூவைச் சூடிகொண்டு வீரர்கள் கூடிச் செல்லுதல்

செவ்வானம் பரவிச் செல்வது போன்றது என்றும், (1)

கப்பிய காரிருளில் காட்டுள் செல்லும் வீரர்

முகபடாம் அணிந்த களிறு போல்வார் என்றும் (4)

புது வெள்ளப் பாய்வு போல வீரர் வழிகளில் ஆரவாரித்துச் சென்றார் என்றும் (5) அன்று பிறந்த கன்றும் ஆவை அறிதல்போல்

ஆன் அவ்வவ் வில்லம் சேர்ந்தன என்றும் (9)

போரியல் மாறாப் புலியுறையும் மலைபோல் அஞ்சகத்து மதில் என்றும் (18)

குன்றின் மேல் விளங்கும் திங்கள் போன்றது கொற்றக் குடை என்றும் (20)

மற்றைக் குடைகள் விண்மீன்கள் போன்றன என்றும் (20)

வானளாவிய அரணம் முகிலை ஒப்பது என்றும்,ஆங்கிருந்து எழுந்த பகைவர் ஊர் அழிவு, தாய் வாங்கு பிள்ளையைப் பேய் வாங்கிய தன்மையது என்றும் (24)