உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல் ‘மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஓரினமாய்ப் பொன்னின் பெயர் படைத்தாற் போலாதே - கொன்னே ஒளிப்பாரு மக்களாய் ஒல்லுவ தாங்கே

117

அளிப்பாரு மக்களா மாறு'

(40)

என்பது அது.

-

கரும்

தமனியம் - தங்கம்: பைம்பொன் என்பது அது. இரும்பு பொன் என்பது பெயரால் ஒன்றாயினும் இயலால் எத்தகு வேற்றுமை என்று கூறி ஒளிப்பாரும் மக்கள், அளிப்பாரும் மக்கள் என மக்களொருமையை எய்தார் என்றார்.

கொன்னே என்பது பயன் செய்யாப் பதர் என்பதைக் காட்டும் டைச்சொல்.

'அச்சம் பயமிலி காலம் பெருமையென்'

றப்பால் நான்கே கொன்னைச் சொல்லே'

டை.)

என்பது தொல்காப்பியம் (இடை

ஊக்கமிக்கவன் பகைக்கு அஞ்சினான் போலப் பின் வாங்குதலும், பின்னர்ப் பகைவன் ஒருங்கு அழிய முன்னேறித் தாக்குதலும் போரியல். இதனை

'ஊக்க முடையான் ஒடுக்கம் பொருநகர் தாக்கற்குப் பேரும் தகைத்து’

எனப் பேசும் திருக்குறள்.

ஆட்டுக்கடா ஒன்றோடு ஒன்று தாக்குங்கால் பின் சென்று விரைந்து முன்னோடி மின்னெனப் பாய்ந்து இடியென இடித்தல் காணக் கூடியதே. இதனை உவமைப்படுத்தியது திருக்குறள்.

போர் வீரர் தம் வீரப்பேற்றைக் குன்றாமல் குறையாமல் குலையாமல் காத்து வளர்த்தற்குச் செம்மறிக் கடாக்களை மோத விட்டுக் காணல் வழக்கம். அந்நிலையில் பயின்ற வீரர் பின்வாங்கி முன்னேறி முட்டுதலைப் பெரும்பொருள் அரும்பொருளாகக் கூறுகின்றது.

‘தாக்கற்குப் பேரும் தகர்போல் மதிலகத்து ஊக்க முடையார் ஒதுங்கியும் - கார்க்கீண்டு