உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

'வேம்புதலை யாத்த நோன்காழ் எஃகமொடு...

நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்

சிலரொடு திரிதரு வேந்தன்

பலரொடு முரணிய பாசறைத் தொழிலே'

என நெடுநல்வாடை இப்பாசறை நிலையை விரித்துக் கூறுதல் ஒப்பிட்டுக் காணத்தக்கதாம். எஞ்சிய நயங்களை இப்பாடல் விளக்கத்தில் கண்டு கொள்க.

உவமை:

ஓதுதலில் சிறந்த ஓதுதல் பொருளுணர்ந்து ஓதுதல். அப் பொருளுணர்ந்து ஓதுதலுக்கு உலகவரும் சிறப்பாகத் தமிழரும் கண்ட ஒருவழி உவமைப்படுத்திக் கூறுதலாகும். உவமைச் சிறப்பே 'அணியெனப் பாராட்டும் உயர் அழகுக்குப் பாக்களை ஆட்படுத்திற்று. உவமை உருபுகள் ஐம்பதிற்கு மேலும் விரிந்துள்ள பான்மையை அறிவார் அதன் சிறப்பினைத் தெளிவார். உவமை, பொருள், ஒப்புச் சொல், ஒப்புமை என்பவற்றாலும், அவற்றை ஆளும் முறையாலும், பல்வேறு அணி நயங்களாய்க் கிளைத்தமை தொல் உவமையியலாலும், பிற அணிநூல்களாலும், விரிந்த இலக்கிய படைப்புகளாலும் இனிது விளங்கும்.

இப்பெரும் பொருள் விளக்கமோ தன் பாடல்களுள் செம்பாதிக்கு மேல் உவமை நயங் கொண்டு திகழ்கின்றது. ஒரு பாடலில் ஒன்றற்கு மேலும் உவமை கொண்டும் சிறக்கின்றது.

கால், தலை, கை யுடையாரை யெல்லாம் மாந்தர் என்னும் பொதுப் பெயரால் வழங்கி விடுகிறோம். இவ்வாறு உறுப்புப் பொதுமை மாந்தப் பொதுமையாகுமா? பண்பு நலம் ஒத்திருத்தல் அல்லவோ மாந்தப் பொதுமை என்னும் திருக்குறள். பெரும் பொருளோ, மின்னும் பொன்னும் பொன்தான்? இரும்பும் பொன்தான்! பொன் என்னும் பொதுப் பெயரையன்றித் தன்மையாலும் சிறப்பாலும் பொதுமையுண்டோ? என்கிறது.

இயன்றதையெல்லாம் இல்லை என்னாமல் ஈபவரும் மாந்தர் தாம்! இருப்பதையும் இல்லை என்று மறைந்து கொள்பவரும் மாந்தர் தாம்! இவர், மாந்தப் பொது நிலையர் ஆவரோ, என்கிறது பெரும் பொருள் விளக்கம் 'கொடுப்போர் ஏத்திக் கொடா அர்ப்பழித்தலுக்கு எடுத்துக் காட்டுகிறார் இனியர் இப்பாடலை,