உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்) 'யானை நிரையுடைய தேரோ ரினும் சிறந்தார் ஏனை நிரையுடைய ஏர்வாழ்நர் - யானைப் படையோர்க்கும் வென்றி பயக்கும் பகட்டேர் உடையோர்க் கரசரோ ஒப்பு’

என்பது ஒப்பிலாச் சிறப்பினதாம்.

123

புரத்தலாம் காத்தலைப் 'புரவு' என்கிறார் (13) பொருந்தாராம் பகைவரைப் புல்லார் என்கிறார் (13). புகை மண்டுதல், புகழ் மண்டுதல் என்பவை போலத் 'தேர்மண்டுத'லைக் குறிப்பிடுகிறார் (15). கூற்றுவனை 'மறலி' என்பதுடன் ‘மாறாமறலி' என்று அடைதந்து வழங்குகிறார் (17). அகன்று விரிதலை 'அகலிய' என ஆள்கிறார் (19). அச்சத்தால் கண்களை மூடிமூடித் திறத்தலைச் ‘சும்பிளித்தல்' எனப் புத்தாட்சி புரிகிறார் (19). மகிழ்வு தரும் கொழுநரை 'மகிழ்நர்' என வழங்குகிறார் (21). நெடுநாள் வாழும் வாழ்வைக் கவர்தலை 'நீணாட்கோள்' எனப் படைத்து மொழிகிறார் (21). அழித்தலை ‘வீட்டல்' என்கிறார் (24). புறமிட்டு ஓடுதல் அல்லது புறங்காட்டுதலைப் புறத்தீடு எனப் புகழ்கிறார் (25).

காயம் என்பது புண்பொருள் தந்து பின்னே வடுவுக்கு ஆகி, அது நிலைபேறாம் இயலில் காயம் - நிலைபேறு எனப் பொருள் தரும். அதற்கு 'உடல்' என்னும் பொருளும் போர்ப் புகழ்நிலைப் பேற்றால் உண்டாம். அதனால்,

'போர்க்குறிக் காயமே புகழின் காயம்'

என்றார் பேராசிரியர் சுந்தரனார். இவர் 'காயத்து ஊறு அஞ்சாக் களிற்றை' உரைக்கிறார் (28). புறத்தே புலப்பட உயர்த்திப் பிடித்தலைப் 'புறங்கணித்தல்' என்கிறார் (29). படர்ந்த முக படாத்தைப் ‘படம்' என்கிறார் (30). கதிரோனுக்கு 'வெய்யோன்' எனவும், 'செய்யோன்' எனவும் பெயர் வழக்குண்மையைக் கொண்டு இவர், வேந்தன் இயல்புக்கு அவ்விரண்டு நிலைகளையும் சுட்டுதல் நனி சிறப்பினதாம். 'செம்மல்' என்னும் நிரம்பிய தன்மை விளங்க ஆட்சி புரிதலும் அருமையாம் (31). இடியால் இடிமுகிலும் இடியுண்ணும் என்பதை, 'இடியால் இடிமுகிலும் ஏறுண்ணும்' என அழகொழுகக் கூறுகின்றார் (32).