உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

பகைவர் ஆற்றலை அழித்து ஆனை மீட்டதோள். கடற்பகை அழித்து மண்ணுலகை மீட்ட கரிய ஏனத்தின்

(பன்றியின்)

கொம்பினை ஒப்பதாம் என ஒப்புக் கூறுதல்

வழியாக ஒரு தொன்மச் செய்தியை உரைக்கிறது. அது,

'கடல்புக்கு மண்ணெடுத்த காரேனக் கோட்டின்

மிடல் பெரி தெய்தின மாதோ - தொடலைக்

கரந்தை மறவர் கருதாதார் உள்ளத்

துரந்து நிரைமீட்ட தோள்

என்பது (6). இது வராகத் திருப்பிறப்புக் கதையாம்.

அறிவுடைமை இளையர்க்கு உண்டாகும்; முதியர்க்கு உண்டாகும் என்பது இல்லை, தன் தந்தை பாலின்பம் துய்ப்பதற் காகத் தன் பாலுணர்வையே ஒடுக்கிக் கொண்ட இளையனும் உளன் அல்லவோ என்கிறது பெரும் பொருள் விளக்கம். 'வீடுமன், நோன்பைக் குறிப்பது அது.

'இளையர் முதியர் எனவிருபால் பற்றி

விளையும் அறிவென்ன வேண்டா - இளையனாய்த்

தன்தாதை காமம் நுகர்தற்குத் தன்காமம்

ஒன்றாது நீத்தான் உளன்'

என்பது அவ்வெண்பா (39)

சொல்லாட்சி;

பெரிதும் செஞ்சொல்லாலேயே அமைந்த அருமையது பெரும் பொருள் விளக்கம். வேற்றுச் சொல் விரவா நடையின் வியன்சுவை சுரப்ப அமைந்த சொல்லாட்சியுடையது இது. இவ்வியல் இதன் காலப் பழமையைக் காட்டுவதாம்.

புகார் வணிகர் சிறப்பை,

‘ஈட்டிய எல்லாம் இதன்பொருட் டென்பது

காட்டிய கைவண்மை காட்டினார்’

என்பது தனிப்பெரும் சொல்லாட்சியும் பொருளாட்சியும் உடையதாம்.

உழவர் மாண்பை,