உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

125

தனிநிலைப்பாவாய் வாழ்த்துக்கு ஆயதுடன், வெண்பாவில் தொடங்கி அகவலில் முடியும் மருட்பா வாழ்த்துக்கு இயையும் எனக் கொண்டனர். மற்றும் இறையாம் நிறை தலைமையை உயிராம் தலைவி ஒன்ற வாழ்த்தும் வாழ்த்தியல் கைக்கிளை போல்வது எனக் கருதிய கருத்தால், அதற்குரியதாய் ஆசிரியர் ஓதிய வெண்பா வாகி ஆசிரிய இயலான் முடியும் மருட்பாவைப் புறநிலை வாழ்த்துக்கு மேற் கொண்டனர் என அறிய வாய்க்கின்றது.

கைக்கிளையை மருட்பாவில் பாடிய புறப்பொருள் வெண்பா மாலையும், புறநிலை வாழ்த்து முதலியவற்றை அவ்வாறு பாடாமல் வெண்பா யாப்பில் பாடியமை எண்ணத் தக்கதாம்.

'கண்ணுதலோன் காக்க கடிநேமி யோன்காக்க எண்ணிருதோள் ஏந்திழையாள் தான்காக்க - பண்ணியநூற் சென்னியர்க் களிக்கும் செல்வனீ மன்னுக

நாளுமிம் மண்மிசை யானே’

என்பது பெரும் பொருள் விளக்கத்தால் அறியப்படும் வாழ்த்துப்பா இவ்வாழ்த்துடன் நூல் நிறைந்ததாகலாம். புறத்திரட்டு வாழ்த்து அதிகாரத்துடன் (131) பொருட்பால் நிறைகின்றது. அதில் இடம் பெற்ற பாட்டு இது.

இப்பாடலால் நெற்றிக் கண்ணன், சக்கரப் படையான், கொற்றவை ஆய மூவரையும் குறித்தலால், இவர் சமயச் சால்பு விளங்கும்.

இந்நூலை இயற்றியவனும், சென்னியாகிய சோழவேந்தர்க்குப் படையலாய் வழங்கியவனுமாகிய நூலாசிரியனை, அவன் நலத்திலே ன்பங் காண்பான் ஒருவன் வாழ்த்திய வாழ்த்தாக இருத்தல் வேண்டுமெனக் கருதலாம். 'பண்ணியநூல், சென்னியர்க்கு அளிக்கும் செல்வன்நீ மன்னுக' என்பதனால் இப்பொருள் கொள்ளவாய்க் கின்றது. இனிவேறு பாடல்களில் இக்குறிப்பினை உறுதி செய்யும் வாய்ப்பு வாயாமையால் இது கருதுகோளாகவே அமைவதாம்.