உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1)

3. நூலும் உரைவிளக்கமும்

வெட்சித் திணை

நிரைகோடல்

(பகைவரின் பசுக்களைக் கவர்ந்து கொள்ளுதல்)

வெவ்வாய் மறவர் மிலைச்சிய வெட்சியால்

செவ்வானம் செல்வதுபோல் செல்கின்றார் - எவ்வாயும் ஆர்க்கும் கழலொலி ஆங்கண் படாலியரோ

போர்க்கும் துடியொடு புக்கு. - பு.தி. 1246

மேற்கோள்: இது நிரைகோடற்கு எழுந்தோர் படையியங்கு அரவம் கண்டோர் கூற்று (தொல். புறத். 3. நச். மேற்.)

பொருள்

விளக்கம்

கொதிக்கும் வாய்மொழியுடைய மறவர் சூடிய வெட்சிப் பூவால் செவ்வானம் பரவிச் செல்வது போல் செல்கின்றார். போர்விம்ம ஒலிக்கும் துடிப் பறையின் முழக்கத்துடன் சேர்ந்து எவ்விடத்தும் அவர்கள் கட்டிய கழலொலி அவியாதிருப்பதாக. 'வெவ்வாள்' என்பதும் பாடம். ஆநிரை கவர்தற்குச் சினந்து செல்கின்றாராகலின் அவர்கள் கொதிப்பை வெளிக்காட்டலே சிறப்பாகலின் 'வெவ்வாய்' என்றல் பொருந்தும். வாய்சினந்துரைத்தல் கூறவே அகச்சினம் உண்மை பெறப்படும். ஆகோள் மறவர் வெட்சிப் பூச்சூடுவராகலின் 'மிலைச்சிய வெட்சி' என்றார். பறையொலியினும் விஞ்சக் கழலொலியே மறவர்க்கு இன்பமும் வீறும் ஊட்டுமாகலின், துடியொடு புக்கு ஆர்க்கும் கழலொலி படாலியரோ' என்றார்.படாமை

-

ஒலியவிந்து பாடின்மை.