உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

127

ஆகோளுக்கு எழுங்கால் எழுந்தார் ஊர்க்கண் அறைந்தபறை இஃதாம். வீரரை ஒருக்கணித்துத் திரட்ட அறைந்த பறை என்க.

'மறவர் செவ்வானம் செல்வதுபோல் செல்கின்றார்; துடியொடு புக்குக் கழல் ஒலி படாலியரோ' என இயைக்க

நிரைகோடல்

(பகைவர் கவர்ந்து கொண்ட பசுக்களைக் மீளக் கொள்ளுதல்)

2) அடியதிர் ஆர்ப்பினர் ஆபெயர்த்தற் கன்னாய் கடிய மறவர் காழ்ந்தார் - மடிநிரை

மீளாது மீளான் விறல் வெய்யோன் யாதாம்கொல் வாளார் துடியார் வலம் - பு.தி. 1245.

மேற்கோள் : 'இது

விளக்க

(1)

மீட்டற்கு எழுந்தோர் படையிடங்கு

அரவம். கண்டோர் கூற்று'

-

(தொல். புறத். 3 நச்.)

பொருள் : அந்தோ! கடிய நடையால் அடி அதிரும் ஆரவார மிக்க கடுங்கண் மறவர், வெட்சியார் கவர்ந்த ஆநிரைகளைப் பெயர்த்தற்குச் சினந்தெழுந்தார். வலிமையால் பகைவரும் விரும்பும் அவர்கள் மடிவளம் பெருகிய ஆநிரைகளை மீட்டாமல் தாம் மீளார்; வாள் நெருங்க நின்று துடிகொட்டுவார் பெறும் வளம் எத்துணைத்தாமோ? யாம் அறியோம். அடியதிர்தல் நிலம் நடுங்க நடையிடல். வெட்சியார் ஆநிரை கவர்ந்தமை ஊர்க்கு உரைத்து ஒருங்குடன் செல்ல வேண்டிற்றாகலின்துடியொடும் ஆர்ப்பொடும் புறப்பட்டார் என்க. கதழ்தல் எரியெனச் சினத்தல். ஈன்றணிய ஆக்களை நினைந்து 'மடிநிரை' என்றார். வாங்குநர் கைவருந்தும் அல்லது தான் குறையாத் தகைமையது என வளப் பெருக்குக் காட்டுவாராய் 'துடியர் வளம்யாதாம்?' என்றார். ஆபெயர்த்தோர் துடியர் முதலோர்க்கு எண்ணிப் பாராது ஈதல் வழக்கு ஆதலின்.

-