உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

இயைப்பு

இளங்குமரனார் தமிழ்வளம் -35 ஓ

அன்னாய் என்பது அம்மா, ஐயோ,அந்தோ என்பன போல இரங்கற் குறிப்பாம். விளியன்று.

ஆபெயர்த்தற்கு மறவர் கதழ்ந்தார்; நிரைமீளாது மீளார்; துடியர் வளம் யாதாம்?' என இயைக்க (2) பாக்கத்து விரிச்சி

(ஊர்ப்புறத்துக் கேட்ட நற்சொல்)

3) திரைகவுள் வெள்வாய்த் திரிந்துவீழ் தாடி நரைமுதியோன் ஏற்றுரைத்த நற்சொல் - நிரையன்றி எல்லைநீர் வையம் இறையோர்க் களிக்குமால்

வல்லையே சென்மின் வழி

பு.தி. 1239.

மேற்கோள்: சுருக்கேறிய கன்னத்தையும் வெளிறிய வாயையும் கற்றையாய் வீழ்ந்து தொங்கும் மீசையையும் உடைய நரைமூதாளன் இப்பொழுது உரைத்த சொகினம் (சகுனம்), பகைவர் ஆநிரையை அன்றிக் கடல் சூழ்ந்த நிலப்பரப்பை யெல்லாம் வேந்தர்க்குத் தரும்; ஆகலின் விரைந்து ஆகோளுக்குத் தக்க வழியிற் செல்க.

விளக்கம்

தாடி மீசை: 'இரலை, மருப்பிற் றிரிந்து மிறந்து வீழ்தாடி' (கலி. 15) என்பதால் இப்பொருளதாதல் அறிக. நற்சொல்லாவது விரிச்சி. இதனை சொகினம், பறவாப்புள், நல்வாய்ப்புள் எனவும் கூறுவர். செல்வார் செல்லும் வினை செவ்விதின் நிறைவேறச் சொல்லும் சொல்லும் (உருவிலிச் சொல் அல்லது அசரீரி) பறவை முதலியவற்றின் ஒலியும் விரிச்சி என்க. விரிச்சி கண்டும் கேட்டும் கூறுவோன் முதுமை விளங்கத் 'திரைகவுள்.... முதியோன்' என்றார்.

'இன்று' என்பது இந்நாள் எனச் சுட்டாமல் இப்பொழுது எனக் குறித்து நின்றது. செல்வது நிரைகோடற்கே எனினும் பின் விளைவையும் எண்ணி ‘நிரையன்றி' என்றான். இது முதியோன்