உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

129

உரையைக் கொண்டு கூறியது. நற்சொல்லின் நனிசிறப்பை ஓர்ந்து, 'எல்லைநீர் வையம் இறையோர்க்களிக்குமால்' என்றான். உலகம் பொது என்னும் சொல்லை வேந்தர் பொறார் என்பது வழக்காதலின் இவ்வாறுரைத்தான்.

வாய்க்குங்கால் வினையை விரைந்தாற்றல் முறைமையாகலின் 'குத்தொக்க சீர்த்த இடத்து' என்பதுபோல் (திருக்.490) 'வல்லை' என்றான். வல்லை-விரைந்து.

முதியோன் உரைத்த சொல் நிரையன்றி வையம் இறையோர்க்கு அளிக்கும்; வல்லைநீர் சென்மின்' என இயைக்க.

செலவு

(3)

(செல்லுதல்)

4) பிறப்புலம் என்னார் தமர்புலம் என்னார்

விறல் வெய்யோர் வீங்கிருட்கண் சென்றார் - நிறையும் கடாஅம் செருக்கும் கடுங்களி யானை

படாஅ முகம்படுத் தாங்கு.

மேற்கோள்: 'நிரைகோடற்கு எழுந்தோர் ஆண்டு நின்று

பொருள்

விளக்கம்

மீண்டும் போய்ப்பற்றார் புலத்து ஒற்றர் உணராமல் பிற்றை ஞான்று சேறல் - கண்டோர் கூற்று. தொல்.புறத். 3.நச்

வலிய ஆகோள் மறவர் தாம் செல்லுமிடம் பிறர் நாட்டகத்தது என்று எண்ணாராகவும், தம் நாட்டகத்தது என்றும் எண்ணாராகவும் நிறைந்த மதத்தால் செருக்குற்ற களிப்பில் திரியும் பரிய யானைக்கு முகபடாத்தை வைத்தாற் போலக் கப்பிக் கிடக்கும் காரிருள் இடையே சென்றார்.

இருள்கிடக்க வீரர் செல்லுதல் யானையின் முகபடாம் முற்படவும், யானையின் கருநிறம் பிற்படவும் காணும் காட்சியைக் காட்டுவதாம். வீரர் முகபடாமும், இருள் களிறுமாம்.