உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

இயைப்பு

5)

இளங்குமரனார் தமிழ்வளம் -35 ஓ

பிறர்புலம் எனின் அச்சம் மீதூரலும்,தம் புலம் எனின் உரிமை மீதூரலும் ஏற்படும் ஆகலின் அவ் விரண்டும் இலராகச் சென்றார் வீரர் என்றற்குப், 'பிறர்புலம் என்னார் தம்புலம் என்னார்' என்றார். ஆங்கு - உவமை உருபு. 'ஆயிருட்கண் - 'ஆ'சுட்டு நீண்டது.

வீறு தோன்றுமிடத்து வெய்யோராதலேயன்றிப் பிறிதிடத்து விரும்பத் தக்கோராம் என்றற்கு 'விறல் வெய்யோர்' என்றார். யானையை, 'நிறையும் கடாஅம் செருக்கும் கடுங்களியானை' என்றது, அந்நிலையில் தறிகெட்டுப்பாகர் ஆணையையும் கடந்து எங்கும் மதர்த்துத் திரிதலைக் குறிக்கு முகத்தான் எங்கும் காரிருள் கப்பியுள்ளமை காட்டினார்.

'விறல் வெய்யோர், யானைப் படாஅம் முகம் படுத்தாங்கு, ஆயிருட்கண் சென்றார்' என இயைக்க (4)

செலவு

(செல்லுதல்)

கங்கை பரந்தாங்குக் கானப் பெருங்கவலை எங்கும் மறவர் இரைத்தெழுந்தார்-நும் கிளைகள்

மன்றுகாண்

வேட்கை மடிசுரப்பத் தோன்றுவ கன்றுகாண் மெய்குளிப்பீர் கண்டு பு.தி. 1246.

மேற்கோள்: இஃது ஆ பெயர்க்கச் செல்வோர் போகிய செலவு.

பொருள்

கண்டோர் கூற்று.

(தொல்.புறத்.3.நச்.)

கங்கையாறு பரவிச் செல்வது போலக் காட்டில் அமைந்த பெரிய கவர்த்த வழிகளில் எல்லாம் வீரர் நிறைந்து எழுந்தனர். ஆதலால், கன்றுகளே நும் தாயராம் ஆக்கள் நீங்கள் உறையும் தொழுவினைக் காணும் ஆர்வத்தால் மடியில்பால் சுரந்து ஒழுக