உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்கம்

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

131

விரைந்தெய்தும். நீங்கள் மெய்யாகவே அவற்றைக் கண்டு மகிழ்வீர்.

ஆ மீட்டதற்குச் செல்லும் படையின் பெருக்கத்தை யும் அதன் விரைந்த செலவையும் குறிப்பாராய்க் கங்கை பரந்தாங்கு' என்றார். இது நச்சினார்க் கினியர் பாடம். கங்கை கவர்ந்தாங்கு என்பது புறத்திரட்டுப் பாடம். வீரர் செலவு குறித்ததாகலின் கவர்ந்து வருதலாம். பின்னிலையினும் பரந்து செல்லுதலாம். முன்னிலையே தகுமெனக் கொள்ளப் பட்டதாம்.

காட்டை ஊடறுத்துக் கொண்டு செல்லும் யாற்றைப் போல இவரும் காடும் இருளும் ஊடறுத்துச் சென்றார் எனக் கொள்க. கவலை- கவுர்த்த வழி. கன்றுள்ளிக் கனைப்புச் சோர்தல் 'ஈன்றணிய மாடுகளுக்கு இயல்பாகலின் 'மன்றுகாண் வேட்கை மடிசுரப்ப' என்றார்.

எழுந்த எழுச்சி கண்டே இவர் 'மெய்குளிப்பீர் கண்டு' என்றார், வீரர் மாட்டுக் கொண்ட உறுதிப் பாடும் அவர் காட்டிய எழுச்சிப்பாடும் ஊட்டிய தெளிவு பாட்டால் என்க.

கன்றுகாள்! மறவர் இரைத் தெழுந்தார்; நும்கிளைகள் தோன்றுவ; மெய் குளிப்பீர்' என இயைக்க.

ஆகோள்

(ஆநிரைகளைக் கவர்தல்)

கடல்புக்கு மண்ணெடுத்த காலேனக் கோட்டின் மிடல்பெரி தெய்தின மாதோ - தொடலைக் கரந்தை மறவர் கருதாதார் உள்ளத் துரந்து நிரைமீட்ட தோள். பு.தி. 1247.

மேற்கோள்:

(5)

'தொடலைக் கரந்தை எனக் கரந்தை சூடினமை கூறினார்; தன்னுறு தொழிலான் நிரைமீட்டலின்' இது கண்டோர் கூற்று. (தொல்.புறத்.3.நச்.)