உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

பொருள்

விளக்கம்

இயைப்பு

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

கரந்தை மாலை சூடிப் பகைவர் கூட்டம் நினையுமாறு வென்று நம் ஆநிரைகளை மீட்டு வந்த தோளாற்றல். கடலின்கண் புகுந்து நிலத்தை மீட்டு வந்த கரிய வராகத்தின் கொம்புகளினும் மிகுந்த வலிமை பெற்றதாகும்.

இரணியாக்கன் என்பான் நிலத்தைச் சுருட்டி எடுத்துக் கொண்டு கடலுள் புகுந்தானாகத் திருமால் பன்றியுருக் கொண்டு தன் கொம்பால் நிலத்தை மீட்டு வந்ததாகக் கூறப்படும் தொன்மத்தை (புராணத்தை) உட்கொண்ட உவமை இது. வராகத்தின் கொம்பின் ஆற்றலைக் கரந்தையார் தோளாற்றலுக்கு உவமைப்படுத்தினார். இவர் வெட்சியார் கொண்டு சென்ற ஆக்களை மீட்டுவந்த வலியர் என்பதால். மிடல் வலிமை.மாதோ வியப்புப் பொருள் தருவதோர் இடைச்சொல்.

-

-

தொடலை-மாலை, தொடுக்கப்படுவது ஆகலின், இது பூவும் தளிரும் இலையும் கொண்டு தொடுக்கப் படுவது என்ப. கருதார் - பகைவர். கருதாதார் என்பவரும் அவர். 'கருதார் குழாஅம்' என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம் 'கருதாதார் உள்ள' என்றது ஈடு இணையிலாப் பீடுறுபெருமிதம் கருதி என்க. துரந்து - துளைத்து. துரப்பணம் என்னும் குடைகருவி யுண்மை அறிக. இனித் துரந்து என்பது எறிந்து (கொன்று) என்னும் பொருட்டதுமாம்.

'கரந்தை மறவர் தோள் ஏனக் கோட்டின் மிடல் பெரிது எய்தின' என இயைக்க

நோயின்றுய்த்தல்

(6)

(ஆநிரைகளுக்குத் துன்பம் இல்லாமல் பேணிக் கொண்டுவருதல்)

7) கல்கெழு சீறூர்க் கடைகாண் விருப்பினான் மெல்ல

நடவா விரையும் நிரையென்னோ

தெள்ளறற் கான்யாற்றுத் தீநீர் பருகவும்

மள்ளர் நடவா வகை. பு.தி. 1248.