உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேற்கோள்: 'இது கரந்தையார் (ஆநிரையை) நோயின்றுய்த்தது. கண்டோர் கூற்று. (தொல்.புறத்.3. நச்.)

பொருள் : தெளிவுடையதும் கற்கள் பரவிக் கிடப்பதுமாம் காட்டாற்று இனிய நீரைக் கரந்தைவீரர் பருகுதற் கும் செல்லா வகையில், கரடுகள் அமைந்த சிற்றூர்த் தொழுவங்களைக் காணும் ஆர்வத்தால் ஆநிரைகள் மெல்ல நடவாவாய் விரைந்து வரும்! கன்றின்மேல் ஆநிரை கொண்ட அன்பு எத்தகைத்து!

விளக்கம்

இயைப்பு

-

'மெல்ல நடவா விரையுநிரை ஒல்லென' என்பது நச்சினார்க்கினியர் கொண்ட பாடம். ஒல் என்பது ஒலிக்குறிப்பு. காட்டாற்று நீர் சலசலத்துச் செல்லுதலைக் குறித்தது. அறல் -தேய்ந்துபட்ட கல்லும் மணலும். தீநீர் - இனிய நீர். மள்ளர் மறவர். கடை என்றது தொழுவத்தை. ஆங்குக் கன்று நிற்றலால் ஆர்வமுந்த விரைந்தன. ஆநிரை என்க. அவை விரைந்து வருதலைக்

‘கடுவரை நீரில் கடுத்துவர’

என்பார் வெண்பாமாலை யுடையார் (வெட்சி. 11) ஆநிரைகளோடு மள்ளர் விரைந்து வந்ததையன்றி வேறு வகையில் அவற்றை ஓம்பி இன்புறுத்தியமை இப்பாடலில் இல்லையே எனின், ஆநிரையின் விருப்புணர்ந்து தம் விருப்பை வீரர் ஒடுக்கிக் கொண்டதே அவற்றை ‘ஓம்புதலாம்'என்க. அன்றியும், அவற்றை மடக்கி நிறுத்தித் தம் வேட்கையை நிறைவித்துக் கொள்வர் மள்ளர் எனின், அவை துன்புற்று நோயின்று வெதும்ப இடனாக்கினார் அவரென்க ஆகலின்இது உய்த்தல் என்பதற்குப் பொருந்துவதாம்.

'மன்னர் நீர் பருகவும் நடவா வகை நிரை விரையும்' என இயைக்க.

(7)