உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35 நுவலுழித் தோற்றம்

(மீட்டு வந்த ஆநிரை கண்டதாய், அதனை வினவிய சிறப்பு)

8) காட்டகம் சென்றுயிர் போற்றான் கடுஞ்சுரையான்

மீட்ட மகனை வினவுறாள் - ஓட்டந்து

தன்னெதிர் தோன்றும் புனிற்றாத் தழீஇக் கலுழும் என்னெதிர்ப் பட்டாயோ என்று. பு.தி.1249.

மேற்கோள்: 'இது கரந்தை நுவலுழித் தோற்றம் : கண்டார்

கூற்று

(தொல்.புறத். 3. நச்.)

பொருள் : காட்டிற்குச் சென்று தன் உயிரைப் பொருட்டாக எண்ணாமல் பெரிய மடி ததும்பப் பால் சுரந்து

விளக்கம்

நிற்கும் ஆவினை மீட்டு வந்த மகனைத் தாய்

எதுவும் வினவினாள் அல்லள். ஓடிவந்து தன் எதிரே தோன்றி ஈன்றணிய ஆவினைத் தழுவி நீ என்ன துன்பப் பட்டாயோ என்று வினவிக் கண்ணீர் சொரிந்தாள்.

காட்டகம்-காடு: காட்டின் ஊடறுத்துச் சேறலின் 'காட்டகம் சென்று' என்றார். சுரை-மடி; புனிற்று ஆ-ஈன்றணிய ஆ. ஈன்றணிய ஆ ஆகலின் 'கடுஞ் சுரையது' ஆயிற்று. என்னது பட்டாயோ என்றது என்னென்னதுன்பங்களெல்லாம் பட்டாயோ என்று வினாவியது. அவள்தன் அன்பு மீதூர்தலைக் கூறுவாராய்த் தழீஇக் கலுழும்' என்றார் 'என்னதுய ருற்றாயோ?' 'என்னது பட்டாயோ?' என்பனவும் பாடங்கள். முன் அடி நோக்கின்' 'என்னெதிர்' என்பதன் பொருத்தம் - விளங்கும்.

மகன் உயிர் போற்றாது சென்ற அருமை நோக்கி அவன் மீண்டதற்கு உவகையுற்றதை வெளிப்படக் காட்டாளாய் ஆவினை அவள் தழுவியது அதன் பிரிவு தாங்காத பேரன்பு வெளிப்படுத்துவது. 'பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ' என்பது உயிர்ப் பொதுவாகக் கண்ட குறிப்பு இது. அன்றியும் தன்மைந்தன் வீரமாண்பை அவள்