உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

135

வெளிப்பட அறிவாள் ஆகலின் அவன் செயலும் மீட்சியும் அவளுக்கு வியப்புத்தந்தில. பிரியாப் பசு தன் கன்றைப் பிரிந்து மீண்ட இன்ப அன்பே பெரிதாயிற்றென்க. வாய்மொழி அறியா அதன் தாயன்பு மாண்மைத் தாயறிந்து போற்றிய தகவு ஈதென்க. மேய்த்தற்கு ஓட்டிச் செல்லும் போழ்தும் தாயும் சேயும் படும் பாட்டை அறிந்தவள் தழுவிக் கலுழ்தல் நிகழாதவை அல்லவாம்!

'வினவுறாள்; கலுழும்' என இயைக்க. பாதீடு

(8)

(பகுத்துத் தருதல்)

9)

யாமே பகர்ந்திட வேண்டா இனநிரை

தாமே தமரை அறிந்தனகொல் - ஏமுற

அன்றீன்ற தம்மை அறிந்துகொள் கன்றேய்ப்பச்

சென்றீயும் ஆங்கவர்பாற் சேர்ந்து பு.தி. 1250.

மேற்கோள் : 'இது கரந்தை பாதீடு. இது மறவர் கூற்று. ஈத்தலும் ஈதலும் போலப் பாத்தலும் பாதலும் ஒன்றாதலின்

பாதீடு ஆயிற்று'

(தொல்.புறத்.3. நச்.)

பொருள் : யாம் முன்னின்று அவரவர் ஆ நிரையை அவர் களுக்கு உரிமை சொல்லித் தருதல் வேண்டா. அவ்வாநிரைதாமே தமக்குரியாரை அறிந்து கொண்டன போலும் விருப்பம் முந்துதலால், அன்று ஈன்ற ஆவே எனினும் அதனை அறிந்து கொள்ளும் கன்றினைப் போல ஆநிரை அவரவரைச் சென்றடைவனவாம்.

விளக்கம்

ஆவை உரியாரைத் தேடித் தரவேண்டும் என்று இருந்தவர்க்கு அவ்வா தானே உரியாரைச் சேர்தலால் 'யாமே பகர்ந்திட வேண்டா' என்றார். 'யாமே பகுத்திடல் வேண்டா' என்பதும் பாடம்.

ஏம் உற - ஏமுற: விருப்பம் பொருந்த. விருப்ப முடைமை மறவாமைக்கும், அடையாளம்