உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

35

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

காண்டற்கும் அடிப்படை ஆகலின் ஏமுற என்றார். அன்றீன்ற கன்றும் என்பதில் உள்ள உம்மை ஏனைக் கன்றுகளையுரைக்க வேண்டுவதில்லை என்பது குறித்து நின்றது. தம்மை என்றது தமக்குதவிய தாய்ப்பசுக்களை, இளங்கன்று தாயை நாடுதல், ‘பல்லாவுள் உய்த்து விடினும் குழக்கன்று வல்லதாம் தாய்நாடிக் கோடல்’

என்பதால் (நாலடி. 101) விளங்கும். 'தாம்தம், கன்றுகுரல் கேட்டன போல, நின்று செவி ஏற்றன சென்றுபடுநிரையே' என்பது தகடூர் யாத்திரை.

இயைப்பு : இனநிரை தாமே அறிந்தன; யாமே பகர்ந்திட வேண்டா; ஆங்கவர்பால் சென்றீண்டும்' என

இயைக்க.

படைச்செருக்கு

(படைஞரின் பெருமிதம்)

10) வாள்வலம் பெற்ற வயவேந்தன் ஏவலால்

தாள்வல் இளையவர் தாம் செல்லின் - நாளைக்

கனைகுரல் நல்லாவின் கன்றுள்ளப் பாலின்

நனைவது போலுமிவ் வூர்.

– பு.தி. 1237.

(9)

மேற்கோள்: இப்பாடலைப் படைச் செருக்கில் காட்டினார் நச்.

பொருள்

(புறத்.3) நிரைகோடல் என்னும் அதிகாரத்தில்

தொகுத்தார் புறத்திரட்டார். இது நிரை கவர்தலைப் பற்றியது ஆதலால் வெட்சித் திணையினதாம். 'வயவேந்தன் ஏவல்' என்பதால் ‘மன்னுறு தொழில்’ இது கண்டோர் கூற்று.

வாட்போரில் தேர்ச்சி மிக்க வலிய வேந்தனின் ஏவலால் முயற்சி நிரம்பிய இளைய வீரர் ஆகோள் கருதிச் சென்றால் நாளைப் பொழுதில், ஆர்வமீதூரக் கனைக்கும் ஆநிரைகள் தம் கன்றுகளை நினைந்த அளவால் பொழியும் பாலல் இவ்வூர் நனையும் போலும்.