உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்கம்

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

137

வேந்தன் சிறப்பை 'வாள்வலம் பெற்ற வயவேந்தன்' என்பதாலும், வீரர் சிறப்பை, 'தாள்வல் இளைர்' என்பதாலும் குறித்தார். இளையவர் செல்லின் ஊர் பாலால் நனையும் என்றது வீரர்தம் ஆற்றலறிந்த உறுதியாம். இவ்வழிச் சென்றான் திருடு கொடுத்தான்' என்பது போலக் கொள்க.

கன்றுள்ளக் கறவை பொழிதல் அதன் வளத்தையும் உளத்தையும் உரைப்பதாம். வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள் என்னும் கோதையார் வாக்கையும், 'இன்னம் பசும்புல் கறிக்கல்லா இளங்கன்றுள்ளி மடித்தலம் நின்றிழி பால் அருவி' என்னும் குமர குருபரர் வாக்கையும் நோக்குக. இச்செய்தி மேலும் வரும். இஃது உயர்வு நவிற்சியணி.

ளையவர் செல்லின் ஊர் பாலின் நனைவது போலும்' என இயைக்க.

தெய்வம் பராயது

(தெய்வத்தை வாழ்த்தி வழிபட்டது)

11) வந்த நிரையின் இருப்பு மணியுடன்

எந்தலை நின்தலை யான்தருவன் - முந்து நீ

மற்றவை பெற்று வயவேந்தன் கோலோங்கக் கொற்றவை கொற்றங் கொடு.

-

பு.தி. 1238.

(10)

மேற்கோள் : இது தெய்வத்திற்குப் பராயது என்பார் நச். (தொல்.புறத்.3). நிரைகோடலில் தொகுத்தார் புறத்திரட்டார். மறவர், முன்னிலைப் பராவல் பொருளது இது.

பொருள்

யாம் கவர்ந்து கொண்டு வந்த ஆநிரையின் இரும்பு மணியுடன் எம் தலைகளையும் நின்னிடத்து யாமே தருதும். ஆகலின், கொற்றவையே, முதற்கண் எம்கொடையைப் பெற்றுக் கொண்டு வீறுமிக்க எம்வேந்தன் செங்கோல் சிறக்கும் வண்ணம் வெற்றி தருவாயாக.