உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

விளக்கம்

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

ஆகோள் மள்ளர், ஆகோள் சான்றாக இருப்பு மணியுடன் தம் தலையும் தருவதாக வந்த.... தருதும்' என்றார். வந்த என்ற காலமயக்கம் உறுதிபற்றியது. 'நின்றவை எம்தலை தருதும்' என்றது தம் தலையைத் தாமே கொய்து கொற்றவை கையில் கொடுத்தலைக் குறித்ததாம்.

‘அடிக்கழுத்தினுடன் சிரத்தை அரிவராலோ

அரிந்தசிரம் அணங்கின்கைக் கொடுப்பராலோ'

என்னும் கலிங்கத்துப்பரணி (கோயில். 15) கருதத் தக்கது.

தலைதராத முன்னரே 'முந்து நீ மற்றவை பெற்று' என்றது வினைவேறு சொல்வேறு படாத ஆண்ட கையர் ஆகலான் 'கொடுப்பேம்' என்று குறித்ததே கொடுத்தது ஆயிற்றாம் என்க.

வேந்தன் போர்வெற்றியினும் அவன் செங்கோல் வெற்றியே மக்கட்கு நலம் பயப்ப தாகலின் 'கோலோங்கக் கொற்றம் கொடு' என்றார்.

யாம் தருவன ஆநிரை மணியும் எம்தலையும் என இரண்டாக்கிக் கொற்றவையிடம் வேண்டுவது கொற்றம் ஒன்றுமே என்பாராய்க் குறித்தநயம்.

'பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா’

என்பது போன்றதாம்.

'கொற்றவை, யான்தருவன் கொற்றங்கொடு' என

இயைப்பு

இ யைக்க

(11)