உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

35ஓ

இயைப்பு

13)

‘உடையர் எனப்படுவது ஊக்கம்'

'உள்ளம் உடைமை உடைமை'

'உரமொருவற் குள்ள வெறுக்கை'

(ஊக்கமுடைமை)

இம்முக்குறள்களின் முச்சீர்களின் முடிபுகளையறிக. 'இளையர் ஆர்ப்பெடுப்ப; வேந்தன் செல்கின்றான்; ஒன்னார் உள்ளம் இருபாற் படுவது எவன்?' என்றியைக்க.

இயங்குபடை அரவம்

(படை செல்லும் போதுண்டாம் ஒலி) போர்ப்படை ஆர்ப்பப் பொடியாய் எழுமரோ

பார்ப்புர{வு) எண்ணான்கொல் பார்வேந்தன் - ஊர்ப்புறத்து

நில்லாத தானை நிலனெளிப்ப நீளிடைப்

புல்லார்மேற் செல்லும் பொழுது. - பு.தி. 1256.

மேற்கோள்: 'இஃது எதிர் செல்வோன் படையரவம்' (தொல். புறத்.8.நச்)

பொருள் : தன் ஊர்ப்புறத்தின்கண் நிற்றலை விரும்பாத படைகள் நிலம் நெளிந்துபட நெடிய இடங்கடந்து பகைவர்மேற் செல்லும் பொழுதில், போர்வேட்ட படையினர் ஆர்த்தெழும் அவ்வளவாலேயே நிலத்தில் இருந்து பூழ்தி எழும்! வேந்தன் பார்காத்தல் கடனாளன் தான் என்பதைப் போரின்கண் எண்ணான் போலும்!

விளக்கம்

காத்தல் கடனுடையானாம் காவலன் அதனைக் கருதான் போலும் என்றது சுவைமிக்கது. தன்னாட்ட வர்க்குத் தண்ணியனாம் காவல் குடையுடைய வேந்தன், பகை நாட்டவர்க்கு வெங்கொடும் கொலைப்படையுடையனாதலைக் குறித்தார். போர்ப்படை ஆர்த்த அளவால் பொடி யாம் என்றது 'கண்சிவக்க வாள்சிவக்கும்' என்பது போன்றது! அவன் படை ஓர் வீறு உரைத்தது.