உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

141

பார்ப்புரவு - புவிகாத்தல். புல்லார்-பொருந்தார்; பகைவர். புல்லுதல் - பொருந்துதல். நிலத்தைப் புல்லிக் கிடக்கும் புல்லின் தன்மையும், 'புல்லிக் கிடந்தேன்' எனவரும் குறளின் சொன்மையும் அறிக.

'புல்லார்மேற் செல்லும் பொழுது ஆர்ப்பப் பொடியாய் எழும்' வேந்தன் பார்ப்புரவு எண்ணான் கொல்' என இயைக்க. (13)

தழிஞ்சி

(புண்ணுற்ற வீரரைத் தழுவுதல்)

14) தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும் பழிச்சிய சீர்ப் பாசறை வேந்தன் - விழுச்சிறப்பிற் சொல்லிய சொல்லே மருந்தாகத் துர்ந்தன புல்லணலார் வெய்துயிர்க்கும் புண். - பு.தி. 1273.

மேற்கோள்: அழிபடை தட்டோர் தழிஞ்சி என்பதற்கு (தொல்.புறத்.8.நச்.) எடுத்துக்காட்டு. 'வென்றும் தோற்றும் மீண்ட வேந்தர் தம்படையாளர் முன்பு போர் செய்துழிக்கணையும் வேலும் முதலிய படைகளைத் தம்மிடத்தே தடுத்துக் கொண்டழிந் தவர்களைத் தாம் சென்றும் பொருள் கொடுத்தும் வினாவியும் தழுவிக்கோடல். தழிச்சுதல் தழிஞ்சியாயிற்று' என விளக்குவார் அவர். பலரும் பாராட்டும் புகழமைந்த போர்வேந்தன், களத்தில் படைக்கலங்கள் தாக்குதலால் புண்ணுற்ற வீரர்தம் வீடுகள் தோறும் சென்று, அவர்கள் திறங்களைப் பாராட்டியும் உரிமையால் பரிந்தும் சொல்லிய சொற்களே மருந்தாக அரும்பிய தாடியுடைய வீரர்கள் வெதும்பிப் பெருமூச்சு விடுதற்கு அமைந்த புண் மேடிட்டு ஆறின.

பொருள்

விளக்கம்

பாசறை வேந்தன் என்றது, படைவீரர் பட்ட பாடுகளை உடனாகி இருந்து பொருத காலை அன்றிப் பாசறைக்கண் உடனாகித் தங்கியிருந்த