உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

-

இளங்குமரனார் தமிழ்வளம் 35ஓ

சிறப்புக் குறித்து நின்றது. 'வாள்' என்றது படை என்னும் பொதுமை குறிப்பது. கணையும் வேலும் பிறவும் குறித்தலின். பழிச்சிய சீர் என்றது வேந்தன்பாடு புகழ் சுட்டியது. அவன் சொல்லிய சொல்லின் அருமையும் பெருமையும் குறிப்பாராய், 'விழுச்சிறப்பிற்..... மருந்தாக' என்றார். தூர்தல்- மேடிடுதல். இவண் ஆறுதல். புல்லணல் - 'புல்லிய தாடி' என்றார் புறநானூற்று உரைகாரர்.

புண்ணின் கடுமை காட்டுவது 'வெய்துயிர்க்கும்' என்பது. அன்பு மீதூர்ந்து சொல்லும் அருமருந்தாம் என்பது உலகறிந்த உண்மைச் செய்தி. 'மருந்துவத் தினும் சிறந்தது மருத்துவர் சொல்லும் சொல்' என்பது கொள்ளத் தக்கது. 'பரிவிற் சிறந்த மருந்து பாரில் இல்லை' என்க. அப்பரிவும் தாம் மதித்துப் போற்றும் தலைவன் வழியே வருவதாயின் ஈடும் இணையும் இல்லது என்பது தெளிவாம். 'புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்கா, டிரந்துகோள் தக்க துடைத்து' என்னும் குறள் எண்ணத்தக்கது.

இயைப்பு 'வேந்தன் சொல் மருந்தாகப் புண்தீர்ந்தன' என்று

இயைக்க.

உழிஞைத் திணை

கொள்ளார்தேஎம்குறித்த கொற்றம்

(பகைவர் நாட்டைக் கொண்ட வெற்றி)

15) மாற்றுப் புலந்தொறுந்தேர் மண்டி அமர்க்களங்கொள் வேற்றுப் புலவேந்தர் வெல்வேந்தர்க்(கு) - ஏற்ற படையொலியில் பாணொலி பல்கின்றால் ஒன்னார் உடையன தாம்பெற் றுவந்து - பு.தி. 1272.

மேற்கோள்:

(14)

'கொள்ளார் தேஉங் குறித்த கொற்றம்' என்பதற்கு (தொல்.புறத்.12.நச்.) எடுத்துக்காட்டு. 'தன்னை கழ்ந்தோரையும் தான் இகழ்ந்தோரையும் கொள்ளார் என்ப என்றும் விளக்குவார் அவர்.