உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள்

விளக்கம்

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

143

தமக்கு மாறான மன்னர் நாடுதொறும் தேர்கள் நெருங்க அவர்தம் போர்க்களங்களைக் கொண்ட வலிய பகைநாட்டு வேந்தர் நம் வெற்றி வேந்தர்க்கு எதிரிட்டு நின்றக்கால் எழுந்த படைவீரர்தம் ஆர்ப்பொலியினும் பாடிப் பெறுதற்கு வந்த பாணர் ஒலிமிகுதியாயிற்று; பகைவர்தம் உடைமையாக இருந்தன எல்லாமும் தாம் கொளப்பெற்று மகிழ்ந்து. பகைவர் எளியரல்லர்; வலியர் என்று தெளிவித்தற்கு 'மாற்றுப்.... வேந்தர்' என்றார். அவரையும் இவர் வென்றார் என்பதைத் தெளிவிக்க ‘வெல்வேந்தர்' என்றார்.

படை செல்லுங்காலும் பொருங்காலும் ஒலி மல்குதல் இயற்கை. அவ்வொலியினும் பாணொலி மிக்க தென்பது பகைவரிடத்துப் பெற்ற வளங்கள் தாம் பெற வாய்க்கும் மகிழ்வால் என்க.

சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி என்பானை ஊன் பொதி பசுங்குடையார் என்பார்,

'ஒன்னார், ஆரெயில் அவர்கட் டாகவும் நுமதெனப்

பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்

பூண்கடன் எந்தைநீ இரவலர் புரவே'

எனப் பாடுதல் அறியத்தக்கது. பகைவர் மதிலைப் பற்று முன்னரே அதனைப் பாணர்க்குக் கொடையாக்கும் சிறப்பை வெளிப்படுத்திக் கூறினார்.

‘பகைவர் நாட்டினைத்தான் கொள்வதற்கு முன்னேயும் கொண்டான் போல வேண்டியோர்க்குக் கொடுத்தலைக் குறித்த வெற்றி’

என்னும் நச்சினார்க்கினியர் உரையும் கருதத் தக்கது. (புறத்.12). இயைப்பு : 'வெல்வேந்தர்க்கு, உடையன பெற்றுவந்து பாணொலி பல்கின்று' என இயைக்க. (15)