உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு

(நினைத்ததை நிறைவேற்றும் தலைவன் சிறப்பு) 16) மழுவான் மிளைபோய் மதிலான் அகழ்தூர்ந்(து) எழுவாளோன் ஏற்றுண்ட தெல்லாம் - இழுமென மட்டவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ விட்டெரிய விட்ட வகை. - பு.தி. 1339.

மேற்கோள்: 'உள்ளியது முடிக்கும் வேந்தனது சிறப்பு' என்பதற்கு (தொல்.புறத்.12. நச்.) எடுத்துக்காட்டு. 'குறித்த

பொருள்

விளக்கம்

.

குறிப்பினை முடிக்கின்ற வேந்தனது சிறப்பினை அவன் படைத்தலைவன் முதலியோரும், வேற்று வேந்தன்பால் தூது செல்வோரும் எடுத்துரைத்தல்' என இதனை விளக்குவார் அவர்.

கட்டவிழ்ந்த மலர்க்கண்ணிசூடிய பகைவேந்தன், சீற்றத்தைப் பெருக்கி நெய்விட்டதைப் போல் பொங்கி எரிய விட்டமையால் தான் மழுவால் காவல்காட்டை அழித்து உள்ளே புகவும், மதிலை இடித்துத் தகர்த்தலால் அகழியை மேடுபடுத்தவும், ஓங்கி எழும்பும் வாட்படையுடைய வேந்தன் ஏற்றுச் செய்யுமாறு செய்ததாம்.
மறவேந்தன் என்பது பகை வேந்தனையும், எழுவாளோன் என்பது பாடு புகழ் வேந்தனையும் குறிப்பன. காடு அழிவுக்கும், மதில் தூர்வுக்கும் தூண்டியவன் பகைவேந்தனே என்பாராய் 'சீற்றத்தீ விட்டெரிய விட்ட வகை' என்றார். 'விட்ட மிகை என்பது தொல்காப்பியத்துப் பாடம். இழுமென என்றது அருவி முழக்கத்தையும் இசை முழக்கத் தையும் சுட்டுவது. இவண் சினத்தீ பொங்கி எரிதற்கு வந்தது. இழுது நெய். 'எரியும் நெருப்பில் எண்ணெயும் வார்த்தாற்போல' என்னும் உவமை வழக்கு எண்ணத்தக்கது. மழு - கோடரி; வெட்டு படை. மிளை -காவற்காடு.