உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

145

ஏற்றுண்டது - ஏறிட்டு நின்று அழிவுறுத்தக் கொண்டது.

'மறவேந்தன் தீ எரிய விட்ட வகை, எழுவாளோன் போய், தூர்ந்து, ஏற்றுண்டதெல்லாம்' என இயைக்க.

தொல் எயிற்கு இவர்தல்

(பழமையான மதிலைப் பற்றல்)

17) இற்றைப் பகலுள் எயிலகம் புக்கன்றிப்

பொற்றேரான் போனகம் கைக்கொளான் - எற்றாங்கொல் ஆறாத வெம்பசித் தீயால் உயிர்பருகி

மாறா மறலி வயிறு.

பு.தி. 1327.

(16)

மேற்கோள் : 'தொல் எயிற்கு இவர்தல் (தொல். புறத்.12. நச்.) என்பதற்கு எடுத்துக்காட்டு. இதன் பொருளை 'ஒரு

காலத்தும் அழிவில்லாத மதிலை இற்றைப் பகலுள்

அழித்தும் என்று கூறி அஃது அழித்தற்கு விருப்பஞ் செய்தல்' என்பார் அவர்.

பொருள் : இற்றைப் பகற் பொழுதுள் பகைவர் கோட்டையுள்

விளக்கம்

புகுந்தன்றி அழகிய தேரையுடைய வேந்தன் உணவைக் கையால் தொடவும் மாட்டான். ஆதலால், ஆறுதல் இல்லாத கொடிய பசித் தீயினால் உயிர்களை யுண்டு பசியிலாத கூற்றுவனின் வயிறு என்னாமோ? 'பகல்' என்பது பொழுது விழுதற்கு முன்னாம் பொழுதைக் குறித்தது. பொற்றாரான் என்பது நச்சினார்க்கினியர் பாடம் போனகம் -உணவு. கைக்கொள்ளான் என்றமையால் உண்ணாமை வெளிப்படை. 'என்னாங்கொல்' என்பது 'எற்றாங் கொல்' என எதுகை நோக்கி வலித்தது. உயிர்பருகு முன் ஆறாத வெம்பசியாக இருந்த வயிறு, பெருக உண்டலின் மாறாத தாயிற்று. மாறாமை உண்டது அறாமை (செரியாமை).