உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

147

புலிப்போத்துக்கு உவமை கூறினார். பகைவர் நினைக்கவே அஞ்சுவர்; நேரிற் காண நேர்வரோ என்றற்கு. அருவரை அணுகுதற்கு அரிய மலை; மலைமுழை; வேந்தன் வீற்றிருக்கும் அரண் மனைக்கும், ஓலக்கத்திற்கும் ஆகியது.

படையாற்றல் கூறியவர் கொடையாற்றல் கூறுவா ராய் 'எல்லார்க்கும் எல்லாம் கொடுத்து' என்றார். ஈட்டிய வெல்லாம் ஈதற்கே என்பதற்கே என்று காட்டுவார் போல ஈந்தார் என்று இவர் கூறியதும் இவண் எண்ணத்தக்கது (35). வீரமும் கொடையும் சேரவே அமைதல் பண்டை வேந்தரியல் என்பதைச் சங்க நூல்கள் பலபடக் கூறுதல் அறிக.

'அஞ்சி ஒருவரும் செல்லா மதிலகத்து எல்லார்க்கும் எல்லாம் கொடுத்துத் தேர்வேந்தன் வீற்றிருந்தான்' என்று இயைக்க.

குடைநாட்கோள்

(கொற்றக்குடையை உரிய பொழுதில் எடுத்துச் செல்லுதல்) 19) பகலெறிப்ப தென்கொலோ பால்மதியென் றஞ்சி

இகலரணத் துள்ளவர் எல்லாம் - அகலிய விண்தஞ்ச மென்ன விரிந்த குடைநாட்கோள் கண்டஞ்சிச் சும்பிளித்தார் கண். - பு.தி. 1325.

மேற்கோள்:

பொருள்

(18)

'குடையும் வாளும் நாள்கோள்' என்பதற்கு (தொல்.புறத்.13. நச்.) எடுத்துக்காட்டு. 'இது புறத்தோன் குடைநாட்கோள்' என்பார் அவர். மேலும் 'நாள் கொளலாவது நாளும் ஓரையும் தனக்கேற்பக் கொண்டு செல்வுழி அக்காலத்திற்கு ஓர் இடையூறு தோன்றிய வழித் தனக்கு இன்றியமையாதனவற்றை அத்திசை நோக்கி அக்காலத்தே முன்னே செல்லவிடுதல்' என்பார்.

பால்போன்ற வெண்மதியும் பகற்கொழுதிலேயே வெதுப்புவது என்னை என்று அச்சமுற்று வலிய