உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

விளக்கம்

இயைப்பு

இளங்குமரனார் தமிழ்வளம் - 35 ஓ

மதிலின் அகத்தே உள்ளார் அனைவரும் உள்ளம் நைய, விண்ணளாவ விரிந்த குடைநாட் கோளினைக் கண்டு அஞ்சிக் கண்ணை மூடிமூடி விழித்தனர்.

எறித்தல் - உறைப்பாக வெதுப்புதல். 'நாடுசுடு கமழ்புகை எறித்தலானே' என்பது புறப்பாடல் (6). பால் போலும் நிறமும் தண்மையும் உடையமதி, அது தோன்றுதல் இல்லாத பகற் போதிலே தோன்றி, அது தனக்கியல் பெனக் கொள்ளாத வெதுப்புதலைக் கொண்டிருத்தல் என்னோ என்றார். இது, குடையை மதியாகக் கூறியது. 'மதிக்குடை' என்பார் புகழேந் தியார். இகல் - வலிமை. அரணம் - காவற்கோட்டை. அகலிய அகன்ற. விண்தஞ்சமென்ன விரிந்த குடை என்றது அதன் அகலமும் தூக்கும் பற்றிய உயர்வு நவிற்சி. தஞ்சமாதல் - தழுவிநிற்றல்.

சும்பிளித்தல் என்பது அச்ச மெய்ப்பாடுகளுள் ஒன்று. அது கண்ணைப் பொட்டுப் பொட்டடென மூடி விழித்தலாம். போர்ப் பகுதியில் சும்பிளித் தலைச் சுட்டுவார்கம்பர்.

'அரணத் துள்ளவர் குடைநாட் கோள் கண்டு கண் சும்பிளித்தார் என்று இயைக்க.

குடைநாட்கோள்

20) குன்றுயர் திங்கள்போற் கொற்றக் குடையொன்று

நின்றுயர் வாயிற் புறநிவப்ப - ஒன்றார்

விளங்குருவப் பல்குடைகள் வெண்மீன்போல் தோன்றித்

துளங்கினவே தோற்றந் தொலைந்து.

-பு.தி. 1336.

(19)

மேற்கோள்: 'அகத்தோன் குடை நாட்கோளுக்கு' எடுத்துக் காட்டு இது. (தொல்.புறத்.13. நச்.)

பொருள்

மலைமேல் தோன்றும் முழுமதியைப்போல் வேந்தன் கொற்றக் குடை ஒப்பற்ற வகையில் எழுந்து, உயர்ந்த வாயிற் புறத்தே ஓங்கிநிற்கப், பகைவர்தம் விளக்கமிக்க பல குடைகளும் வெள்ளியாம்