உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விளக்கம்

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

149

விண்மீன்போல் தோன்றித் தன் பொலிவெலாம் தொலைந்து நடுக்கம் கொண்டன.

-

குன்றின்மேல் உயர்ந்து விளங்கும் திங்கள் என்றமை யால், குடை வாயின்மாடத்தினும் உயர்ந்து நின்றமை குறிக்கப்பட்டதாம். நிவத்தல் உயர்தல். ஒன்றார் - பகைவர்; கூடார் என்பதும் அது. உள்ளத்தால் ஒன்றுபடாதவர். பகைவர் குடைகளும் விளங்குருவம் உடையனவேனும், வேந்தன் கொற்றக் குடைமுன் தம்மொளி குன்றியதுடன் நடுக்கமும் கொண்டன என்பதை வெண்மீன் போல் என்பதால் குறித்தார். 'விண்மீன்' என்பது நச்சினார்க்கினியர் பாடம். விண்மீனுக்குப் பொதுவான மின்னி ஒளிவிடல் நடுக்கமாயிற்றாம். தோற்றம் தமக்குரியவாம் பெருமைத்தன்மை.

'குடை வாயிற்புற நிவப்ப ஒன்றார் குடைகள் தொலைந்து துளங்கின' என இயைக்க. (20)

வாணாட் கோள்

(வாளை உரிய பொழுதில் புறப்படச் செய்தல்) 21) தொழுது விழாக்குறைக்குத் தொல்கடவுட் பேணி அழுது விழாக்கொள்வர் அன்னோ - முழுதளிப்போன் வாணாட்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்நர் நீணாட்கோள் என்று நினைத்து. - பு.தி. 1326.

மேற்கோள்: வாள்நாட்கோளுக்கு எடுத்துக்காட்டு (தொல்.புறத். 13.நச்.) இதனைப் புறத்தோன் வாணாட்கோள் என்பார் அவர்.

பொருள் : தன்னடைந்தார்க்கு முழுமையாக வழங்கும் கொடையாளனாம் வேந்தன் வாள்நாள் கொண்டான் என்பதைக் கேட்ட அளவில் மகளிர் தம்கணவர்தம் நெடிய வாழ்நாளைக் கொள்ளுவான் வந்ததாக நினைந்து, இதுகாறும் அவனையன்றித் தொழுது வணங்காத குற்றத்தை உணர்ந்தவராய்த் தொன்மை யான முழுமுதற் கடவுளை வழிபட்டு அழுதலுடைய