உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

விளக்கம்

இயைப்பு

இளங்குமரனார் தமிழ்வளம் -35 ஓ

வராய் விழாக் கொள்வாராயினர்! அந்தோ! இஃதிருந்தவாறு என்னே!

முழுதளிப்போன் என்பது முழுதுல காள்வோன் என்பதுமாம். அவன் கொடை நலம் குறித்தது, படைஞர் தம் செய்ந்தன்றியறிதலால் உயிர்க் கொடை தருதற்கும் முந்துவர் என்பதால் என்க. 'நினதென இலைநீ' என்பதால் வேந்தர் தம்மை அடைந்தார்க்கு முழுதுற வழங்குதல் புலனாம் (புறம். 122). இம்முழுதுறு கொடையை 'அருகாது ஈதல்' என்பது முந்தையோர் வழக்கு (புறம்.320).

கோள் - கொள்ளுதல். மகிழ்நர் நீள் நாள்கோள் என்றது கணவர் நீண்ட வாழ்நாளைக் கொள்ளுதல். நெடுநாள் இடைப்படுதல் என்பது பொருந்தாதாம். தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழு தெழுவாள்' என்பது கொண்டு, தொழுது விழாக் குறை என்றார். நாட்டளவில் விழாக்கோலம் கொள்வ தாகவும் வீட்டளவில் இரங்கல் உண்மையால் 'அழுது விழாக் கொள்வர்' என்றார். இரண்டும் டையறவு படாமல் நிகழ்தலைச் சொற்புணர்வும் காட்டுமாறு 'அழுது விழா' என்றார். அன்னோ - இரக்கக்குறிப்பு.

'மடந்தையர் நினைந்து, பேணி, விழாக் கொள்வர்’ என இயைக்க.

வாணாட் கோள்

22) முற்றரணம் என்னும் முகிலுருமுப் போற்றோன்றக் கொற்றவன் கொற்றவாள் நாட்கொண்டான் - புற்றழிந்த நாகக் குழாம்போல் நடுங்கின என்னாங்கொல்

வேகக் குழாக்களிற்று வேந்து.

பு.தி.1337.

(21)