உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

151

மேற்கோள்: இஃது அகத்தோன் வாள் நாட்கோள் (தொல். புறத். 13.நச்.).

பொருள் : பொறிச் சிறப்பாலும் வன்மையாலும் காவற் சிறப்பாலும் முழு முதல் அரணம் என்னும் முகிலில் இடியெழுந்தாற்போல் தோன்றுமாறு வேந்தன் மாறா வெற்றிதரும். வாள்நாட்கோள் கொண்டான். தம் புற்றுகள் அழிபட்ட பாம்புக் கூட்டம் போல் பகைவர் படை நடுக்கங்கொண்டன. விரைந்த செலவுடைய களிற்றுக் கூட்டத்தையுடைய வேந்தன் நிலை இனி என்னாமோ?

விளக்கம்

இயைப்பு

அரணத்தின் சிறப்பறிய முற்றரணம் என்றார். அரணத்தை முகில் என்றார். ஆகலின் வாள்நாட் கோள் முழக்கத்தை இடி என்றார். உருமு - இடி. 'முகிற்கு உருமு' என்பதும் பாடம்.

தம் புற்று அழிந்து விட்டநாகம் பாதுகாப்பை இழந்துவிட்டமை போல வீரரும் பாதுகாப்பிழந்தனர் என்பதாம். 'புற்றிழந்த நாகம்' என்பதும் பாடம். புற்றிழத்தல், இடிபாடுறலாம். 'அதனை விட்டுவந்த' எனின் பொருள் சிறவாதாம். வேகம் விரைவுடன், சினத்தால் உண்டாம் எழுச்சியையும் குறிக்கும். நாகக் குழாம்போல் நடுங்கின என்பதற்குப் படை என்பது வருவித்துரைக்கப்பட்டது.

'கொற்றவன் நாட்கொண்டான்; வேந்து என்னாங் கொல்' என இயைக்க. (22)

ஏணிமயக்கம்

(ஏணிமேல் ஏறிப் போரிடல்)

23) பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொருவர் உடன்றெழுந்தா ராகில் - இருவரும் மண்ணொடு சார்த்தி மதில்சார்த் தியவேணி விண்ணொடு சார்த்தி விடும். - பு.தி. 1330.