உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

மேற்கோள்:

இளங்குமரனார் தமிழ்வளம் - 35 ஓ 'ஏணிமயக்கம்' என்பதற்கு (தொல்.புறத். 18. நச்.) மேற்கோள். அதில் புறத்தோர் ஏணிமயக்கமும் அகத்தோர் ஏணிமயக்கமுமாகிய இரண்டும் ஒருங்கு வருதலுக்கு இது மேற்கோள். ஏணி மயக்கமாவது புறத்தோரும் அகத்தோரும் ஏணிமிசை நின்று போர் செய்தல்.

பொருள் : ஒன்றொடும் ஒப்பில்லாத உயர்ந்த பழமையான ஊரில் போர் செய்தலை விரும்பி ஒருவருக்கு

விளக்கம்

இயைப்பு

ஒருவர் பகைத்துப் போரிட எழுந்தனரானால், எதிரிடும் இருவரும் மண்ணில் நிறுத்தி, மதிலில் சார்த்திவைக்கப்பட்ட ஏணி விண்ணுலகுக்குச் செல்லச் சார்த்தி வைக்கப்பட்டதாகி விடும்.

-

பொருவரு ஒப்பற்ற. மூதூர் ஊரின் பழமையோடு, குடியினர் பழமையும் ஒருங்கு சுட்டுவதாம். உடலுதல் எதிரிடுதல், பகைத்தல். விண்ணொடு சார்த்தல் என்பது போரில் உயிர் நீத்தார் விண்ணுலகு புகுவார் என்னும் கொள்கையைக் குறிப்பதாம். மதிலில் சார்த்தப்பட்ட ஏணியில் நின்று பொரும் வீரர் எஞ்சாமல் பொருது வீடுபேறுறு தலைக் குறிப்பதாய் 'விண்ணொடு சார்த்திவிடும்' என்றார். உடன்றெழுந்தாராகில், ஏணி விண்ணொடு சார்த்தி விடும்' என இயைக்க.

நொச்சி

24) தாய்வாங்கு கின்ற மகனைத் தனக்கென்று பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்தே - வாய்வாங்கு

G

வெல்படை வேந்தன் விரும்பாதார் ஊர்முற்றிக்

கொல்படை வீட்டும் குறிப்பு.

- பு.தி. 1328.

(23)

மேற்கோள்: 'இது புறத்தோன் மனங்காத்த நொச்சி' என்பார் நச். (தொல்.புறத்.13). நொச்சியாவது காவல். அது மதிலைக் காத்தலும் உள்ளத்தைக் காத்தலும்

என்பார் அவர்.