உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருள்

விளக்கம்

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

153

வாய்மையைத் தன்னிடத்தே வாங்கிக் கொண்ட வெற்றி கொள்ளும் படையுடைய வேந்தன் பகைவர் ஊரைச் சூழ்ந்து கொல்லும் வலிய பகைப்படையை அழிக்கும் உட்கோள் எத்தகைத்தோ எனின், தாய் தன் கையில் வாங்குகின்ற மகனைத் தனக்கே உரிமையாகப் பேயொன்று வாங்கிக் கொண்டதோர் தகைத்தாகும் என்க.

வாய் வாங்கு வேந்தன் என்றது, போருக்குப் புறப் படுமுன் வஞ்சினமாக இது செய்வேன் என்று எது கூறினானோ அதனை அப்படியே மெய்ப்பித்துக் கொள்ளுதல். விரும்பாதார் - பகைவர். வீட்டுதல் - அழித்தல். பகைப்படையும் வலியதே என்பார் 'கொல்படை' என்றார். குறிப்பு - குறிக்கொண்டதை நிறைவேற்றும் தன்மை. பெற்றி -தன்மை.

தாய்வாங்குகின்றமை அருளிப்பாடு. பேய் வாங்குகின்றமை கொடுமைப்பாடு. தாய் வாங்குகின்றாள் என்று எண்ணிக் கொண்டு தர, அதனைப் பேய் வாங்குகின்றது என்றால் அந்நிலைமை எத்தகைத்து? சாந்தகத்து உண்டென்று செப்பினைத் திறக்கப் பாம்பகத்து உண்டென்று கண்டமை போன்ற எதிரிடைப் பட்டதாம்.

தாய் கையில் இருந்த மகவை இடாகினிப் பேய் வாங்கித்தன் மடியகத் திட்ட செய்தியைச் சிலம்பு கூறும். அதனை இவ்வுவமையொடு எண்ணத்தகும்.

தாய் வாங்குகின்ற மகவு என்னாமல் ‘மகன்' என்றது போர்க்களங்கருதியென்க. மகளிர் பெயருடையாரையும் போரில் தாக்கக் கூடாது

என்பது நச்சினார்க்கினியம். (தொல். புறத்.10)

'விரும்பாதார் கொல்படை வீட்டும் குறிப்பு, பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்து' என்று

இயைக்க.

(24)