உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்

155

புரிசை (கோட்டை) உயரம், 'மஞ்சுசூழ் வான்தோய்' என்பதால் விளங்கும். ஆன்றோர் அடக்கம், 'ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல்' என்னும் குறளால் விளங்கும்.

'ஆன்றோர் அடக்கம் போல் புரிசைப் பொறி அடங்கின; அஞ்சி ஒதுங்காதார் யாவரவர்' என இயைக்க.

அகத்தோன் வீழ்ந்த புதுமை

(அகமதிலோன் புறத்துத் தாக்குவாரை வெல்ல விரும்புதல்)

26) தாக்கற்குப் பேரும் தகர்போல் மதிலகத்(து)

ஊக்க முடையார் ஒதுங்கியும் - கார்க்கீண்டு

இடிபுறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றார்

அடிபுறத் தீடும் அரிது.

-பு.தி. 1340.

(25)

மேற்கோள்: இஃது அகத்தோன் வீழ்ந்த புதுமை (தொல்.புறத். 13.நச்.).

பொருள்

விளக்கம்

முன்னெறி முட்டுதற்காகப் பின்னே பெயர்ந்து செல்லும் கடாவைப் போல், மதிற்கண் ஊக்கமிக் குடைய வீரர் பின்வாங்கி மறையவும் முகிற்கூட்டம் நெருங்குதலால் இடியெழுந்தாற்போல் எதிர்முட்டி வந்தனர்; ஆதலால் பகைவர்தம் அடியைப் பின்வாங்கித் தப்பிச் செல்லுதலும் இயலாதாம்.

'ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந்தகைத்து' என்னும் குறளாட்சி எண்ணத் தக்கது. தகர் -ஆட்டுக்கடா; அதிலும் செம்மறி யாட்டுக்கடா. கடாப் பின்வாங்குவது போல் பின்வாங்கி முன்னேறக் கருதினார் என்க. கார் முகில். அவை நெருங்க இடிபுறப்படல் போல் இருவரும் முட்டினார் என்க. மாற்றார் - பகைவர். வண் அகத்துழிஞையான். அடிபுறத்தீடு அடியைப் பிறக்கிட்டுச் செல்லும் செலவு; பின் வாங்குதல். அன்றி, அடி பெயர்த்து வைத்தலும்

700