உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156

இயைப்பு

35ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

என்றுமாம். அரிது இன்மைப் பொருள் தந்தது. கார்க்கண் என்பது நச்சினார்க்கினியர் பாடம்.

'ஒதுங்கியும், எதிரேற்றார்; மாற்றார் அடிபுறத்தீடும் அரிது' என இயைக்க.

தும்பைத் திணை

இருநிலந் தீண்டாவகை

தலை துண்டிக்கப்பட்ட உடல் துள்ளல்)

27) வான்துறக்கம் வேட்டெழுந்தார் வாண்மறவர் என்பதற்குச் சான்றுரைப்ப போன்றன தம்குறை - மான்தேர்மேல் வேந்து தலைபனிப்ப விட்ட உயிர்விடாப் பாய்ந்தன மேன்மேற் பல. - பு.தி. 1349.

(26)

மேற்கோள்: 'இது வஞ்சிப் புறத்துத் தும்பையாய் இருநிலந் தீண்டாவகை' என்பார் நச். (தொல்.புறம். 16). 'வஞ்சியுள் விழுப்புண்பட்ட வீரரை நோக்கி வேந்தற்குப் பொறாமை நிகழ்ந்து துறக்கம் வேண்டுழி நிகழ்ந்த தும்பை வஞ்சிப்புறத்தும்பை' என மேலும் விளக்குவார் அவர்.

பொருள்

விளக்கம்

குதிரை பூட்டப்பட்ட தேர்மேல் வந்த வேந்தன் தலைநடுக்கம் கொள்ளுமாறு வீரர்களின் வெட்டுண்ட உடற்குறை தம் உயிர் விடாமல் மேலே மேலேயே எழுந்து பாய்ந்தன. இவை வாள்வீரர்கள் உயர்ந்த வீட்டின்பத்தை விரும்பிப் போருக்கு வந்தனர் என்பதற்குச் சான்றுரைப்பன போன்றன. மான் - குதிரை. பனித்தல் - நடுங்குதல். உயிர்க்கு இயல்பான உயிரிரக்கம் உண்மையால், வெட்டுண்டு வீழ்ந்த உடற்குறைகளின் துள்ளலைக் வெட்டியவனுக்கே அல்லது வெட்டப்படுதற் குக் காரணமாக இருந்தவனுக்கே தலையாட்டம் உண்டாயிற்று என்க. தம் குறை -வீரர்கள் உடல் துண்டங்கள். வெட்டுண்ட உடலகத்திருந்த உயிர் உடனே போகாமல் சிறிது பொழுது இருந்து துள்ளுதல் உண்மையால் அதனைக் தற்குறிப்பேற்ற

காண