உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயைப்பு

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

157

மாக, 'வான்மறவர் வான்துறக்கம் வேட்டெழுந்தார்' என்பதற்குச் சான்றுரைப்பதாகக் குறித்தார். துறக்கம் வீட்டுலகம். 'விட்ட உயிர் விடாப் பாய்ந்தன' என்பது முரண்நயம்.

'குறை, வேந்து, பனிப்ப, மேன்மேல் பாய்ந்தன; மறவர் துறக்கம் வேட்டெழுந்தார் என்பதற்குச் சான்றுரைப்ப போன்றன' என இயைக்க. (27) யானை நிலை

(யானையின் வீறு)

28) மாயத்தால் தாக்கும் மலையும் மலையும் போல் காயத்தூ றஞ்சாக் களிற்றொடும்போய்ச் - சாயும் தொலைவறியா ஆடவரும் தோன்றினார் வான்மேல் மலையுறையும் தெய்வம்போல் வந்து.

-

பு.தி.1400.

மேற்கோள்: இது யானை நிலைக்கு எடுத்துக்காட்டு (தொல். புறத். 17. நச்.).இவ்வியானை நிலையின் துறைப் பகுதியாக 'அரசர் மேலும் படைத்தலைவர் மேலும் ஏனையோர் மேலும் யானை சேறலும் களிற்றின் மேலும் தேரின் மேலும் குதிரை சேறலும் தன்மேல் இருந்து பட்டோர் உடலை மோந்து நிற்றலும் பிறவுமாம் என்று கூறி 'யானை நிலைக்கு' இதனைக் காட்டுவார் அவர்.

பொருள்

விளக்கம்

கண்டறியாதன காட்டிமயக்கும் காட்சியென மலையும் மலையும் தாக்குவது போல் தங்கண் பட்ட புண்ணுக்குச் சிறிதும் அஞ்சாத யானை யொடும், போயழியும் தோல்வி என்பதை அறியாத வீரரும் வானளாவும் மலைமேல் உறையும் தெய்வம் போல் வந்து தோற்றந் தந்தார்.

மலையும் மலையும் தாக்குதல் போல் யானையும் யானையும் தாக்குதலைக் குறித்தார். இல்பொருள் உவமை. மாயத்தால் தாக்குதல், கண்டவர்வியப்புற்று மயங்குமாறு தாக்குதல். காயம் உடல், ஊறு புண்பாடு. இனிக் 'காயத்தூறு' புண்ணின் துயர்

-