உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158

இயைப்பு

இளங்குமரனார் தமிழ்வளம் - 35

என்றுமாம். தொலைவு - அழிவு; போய்ச் சாயும் தொலைவு - புகழ் அழிந்துபடும் தோல்வி. அதனை அறியாமை, வீரர் தனிச் சிறப்பாம். வான்மேல் மலை என்றது மலையின் உயரம் குறித்த உயர்வு நவிற்சி. மனையுறை தெய்வம் போல், மலையுறையும் தெய்வம் என்றார். மலையுறையும் தெய்வம் முருகன் (சேயோன்) என்பது தொல்லோர் வழக்கு. 'சேயோன் மேய மைவரை உலகம்' என்பது தொல்காப்பியம். மலையுறையும் தெய்வம்போல் வந்து களிற் றொடும் ஆடவரும் வந்து தோன்றினார்' என இயைக்க.

யானைமறம்

(யானைப்போர்)

29) மம்மர் விசும்பின் மதியும் மதிப்பகையும்

தம்மில் தடுமாற்றம் போன்றதே - வெம்முனையிற் போர்யானை மன்னர் புறங்கணித்த வெண்குடையைக் கார்யானை அன்றடர்த்த கை. - பு.தி. 1398.

(28)

மேற்கோள்: 'யானைமறம்' என்னும் பகுதியில் வரும் பாட்டு இது.பு.தி.

விளக்கம்

பொருள் கொடிய போர்க் களத்தின்கண் பொருதல் வல்ல யானைப் படையுடைய மன்னர் உயர்த்தெடுத்த வெண் கொற்றக்குடையைக் கரிய யானையின் கை பற்றிப்பிடித்த அப்பொழுதில், அத்தோற்றம் மயக்க மிக்க வானத்தில் மதியும் மதியைப் பற்றும் பாம்புப் பகையும் தம்முள் கலப்புற்று நிற்பது போன்றதாம். : வெம்முனை -கொடிய போர்க்களம். புறங்கணித் தல் - புறத்தே உயர்த்திப் பிடித்தல். அடர்த்தல் பற்றுதல். குடை மதிக்கும், களிற்றின் கை மதியைப் பற்றும் பாம்புக்கும் உவமை; தடுமாற்றம் ஒன்றன் மேல் ஒன்று வீழ்தல். மம்மர் -மயக்கம். மதிப்பகை - கரும்பாம்பு (இராகு). வெண்குடை கார்யானைக் கை என்பன முரண் நயம் உடையன. வண்ணமும் வடிவும் வினையும் ஒத்த உவமை இது.

-