உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

159

இயைப்பு 'யானை குடையை அடர்த்தகை, மதியும் மதிப்பகையும் தடுமாற்றம் போன்றதே' என

இயைக்க.

யானைமறம்

30 வான்தோய் கழுகினமும் வள்ளுகிர்ப் பேய்க்கணமும்

ஊன்தோய் நரியும் உடன்தொக்க - மூன்றும்

கடமா நிலம் நனைக்கும் கார்யானைக் கிட்ட படமாறு நீப்பதனைப் பார்த்து.

பு.தி. 1399.

(29)

மேற்கோள்: 'யானைமறம்' என்னும் பகுதியில் வரும் பாட்டு

இது.பு.தி.

பொருள் : அகன்ற நிலத்தை மறைக்குமாறு ஊறும் மதநீரைக் கொண்ட யானைக்கு அணியப்பட்ட முகபடாம், அரத்த ஆற்றில் இழுபட்டுச் செல்வதைப் பார்த்து விண்ணளாவப் பறக்கும் கழுகுக் கூட்டமும், வளமான நகத்தைக் கொண்ட பேய்க் கூட்டமும், ஊனில் பெருவிருப்புடைய நரிக்கூட்டமும் ஆகிய மூன்றும் ஒன்று கூடி உவந்தன.

விளக்கம்

'மாநிலம் நனைக்கும் கடம்' என மாற்றி அமைக்க. நீப்பது - நீந்திச் செல்வது. படம் - முகபடாம். குருதி ஆற்றில் படம் படகென மிதக்கும் என்க. இனம், கணம் என்பவற்றுக் கேற்ப நரியும் கூட்டமாம் எனக் கொள்க. மூன்றும் உடன் தொக்க என இணைக்க, முற்கண் உள்ள தோய்' தழுவுதல் பொருளும் பிற்கண் உள்ள வோய் விருப்பு என்னும் பொருளும் தந்தன. தமக்கு வேண்டுமளவு உணவு கிடைத்த தென உவந்து கூடின என்க. படமாறு நீப்பது கொண்டு அழிபாட்டின் பெருக்கத்தை அறிய வைத்தார்.

இயைப்பு ‘படமாறு நீப்பதனைப் பார்த்துக் கழுகினமும் பேய்க் கணமும் நரியும் தொக்க' என இயைக்க.

(30)