உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

இளங்குமரனார் தமிழ்வளம் -35 ஓ

தார்நிலை

தலைவனைக் காக்கும் தறுகண் வீரன் நிலை) 31) வெய்யோன் எழாமுன்னம் வீங்கிருள் கையகலச் செய்யோன் ஒளி வழங்கும் செம்மற்றே - கையகன்று போர்தாங்கு மன்னன்முன் புக்குப் புகழ்வெய்யோன் தார்தாங்கி நின்ற தகை. - பு.தி. 1362.

மேற்கோள்: 'வேன்மிகு வேந்தனை மொய்த்தவழி ஒருவன் தான் மீண்டெறிந்த தார்நிலை' என்பதற்கு இதனை எடுத்துக் காட்டுவார் நச். இதனைத், 'தன்படை போர் செய்கின்றமை கண்டு தானும் படை யாளர்க்கு முன்னே சென்று வேலாற் போர் செய்து வென்றி மிகுகின்ற வேந்தனை மாற்றோர் சூழ்ந்துழி அதுகண்டு 'வேறோரிடத்தே பொருகின்ற தன் தானைத் தலைவன் ஆயினும் தனக்குத் துணைவந்த அரசன் ஆயினும் போரைக் கைவிட்டு வந்து வேந்தனொடு பொருகின்றாரை எறிந்த தார்நிலை' என்று விளக்குவார்.

பொருள்

டமகல விரிந்து வந்த பகைவர் போரைத் தானொருவனாக நின்று எதிரிடும் மன்னன் முன்னே புகழ்விருப்புடையோனாம் வீரன் தான் புகுந்து அப்படையை எதிரிட்டு நின்ற தன்மை, கதிரோன் தோன்றுவதற்கு முன்னர்க் கப்பிக் கிடந்த இருள் இடமறச் செல்லுமாறு செந்தண்மையால் ஒளிதரும் எழுஞாயிறு கிளர்ந்த சீர்மை போல்வதாம்.

விளக்கம்

கை

-

-

இடம்; பக்கம். தார் முற்படச் செல்லும் படை; வெய்யோன் - விருப்புடையன். புகழெனின் உயிரும் கொடுக்குவர் ஆகலின் புகழுக்கு வாய்ப்பாம் போரின் முந்து நின்றான் என்க. தகை தன்மை. வெய்யோன் -கதிரோன்; செய்யோன் - செந்தண்மை யுடையனாம் எழுஞாயிறு.வெய்யோன் போல், முழுதிருள் அகலச் செய்யாது எனினும் செங்கதிர் எழும்போதே, காரிருள் படிப்படியே அகலுதல் காண்பார்க்கு இவ்வுவமை நன்கு விளக்கமாம்.