உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 35.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பொருள் விளக்கம் (உரை நூல்)

161

வேந்தன் வெய்யோன்; இப்புகழ் வெய்யோன், செய்யோன் என்க. வேந்தனையும் வீரனையும் தக்கவகையில் உவமைப்படுத்திய உவமை வியப்பு மிக்கது. செய்யோன், வெய்யோன் என்னும் ஆட்சிகள் ஒன்றற்கே இருவேறு பொழுதுகளில் உள்ள பெயர்கள். வேந்தனும் வீரனும் அவ்வாறே ஒத்ததகையர் எனல் உள்ளீடு.

இயைப்பு 'புக்குத் தாங்கி நின்ற நிலை.... எழாமுன்னம் ....ஒளிவழங்கும் செம்மற்றே' என இயைக்க. (31) களிறெறிந்த தெதிர்ந்ததோர்பாடு

32) இடியான், இடிமுகிலும் ஏறுண்ணும் என்னும்

படியாற் பகடொன்று மீட்டு - வடிவேல்

எறிந்தார்த்தார் மள்ளர் இமையாத கண்கண் டறிந்தார்த்தார் வானோரும் ஆங்கு. - பு.தி.1347.

மேற்கோள்: 'களிறெறிந்தெதிர்ந்தோர் பாடு' என்பதற்கு மேற்கோள் (தொல்.புறத்.17.நக்) 'மாற்று வேந்தன் ஊர்ந்து வந்த களிற்றைக் கையெறிந்தானும் கடுங் கொண்டடெதிர்ந்தானும் விலக்கியவனையும் அக் களிற்றையும் போர் செய்தோர் பெருமைக் கண்ணும்' என இதற்குப் பொருள் விரிப்பார் நச்சினார்க்கினியர்.

பொருள்

விளக்கம்

வீரர் கூர்மையான வேலை எறிந்து, தன் இடிபோலும் முழக்கத்தால் இடிக்கின்ற முகிலும் இடிபடும் என்னும்படி களிறு ஒன்றனை மேல்வராமல் திருப்பி ஆரவாரித்தனர்; வானவர்களும் தம் இமைத்த லில்லாத கண்ணால் அதனைக் கண்டு ஆரவாரித்தனர். ஏறு-இடி ; பகடு-யானை ; வடி-கூர்மை; மள்ளர்- வீரர்; மன்னர் என்பது புறத்திரட்டுப்பாடம். இடிமுகிலும் என்பதற்கு இருண் முகிலும் என்றும், கண்கண்டு என்பதற்குக் கண்கொண்டு என்றும் நச்சினார்க்கினியர் பாடம் கொண்டார்.